தொழில்நுட்பம்
விரைவில் இந்தியா வரும் போக்கோ எம்2
போக்கோ பிராண்டின் புதிய போக்கோ எம்2 ஸ்மார்ட்போன் இந்திய வெளியீட்டு தேதி அறிவிக்கப்பட்டு இருக்கிறது.
போக்கோ பிராண்டு இந்த ஆண்டு துவக்கத்தில் போக்கோ எம்2 ப்ரோ ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்தது. தற்சமயம் போக்கோ எம்2 ஸ்மார்ட்போனை இந்திய சந்தையில் அறிமுகம் செய்ய இருக்கிறது. புதிய போக்கோ எம்2 இந்தியாவில் செப்டம்பர் 8 ஆம் தேதி அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.
புதிய ஸ்மார்ட்போன் அறிவிப்பை டீசர்களின் மூலம் போக்கோ தெரியப்படுத்தி இருக்கிறது. டீசரின் படி போக்கோ எம்2 ஸ்மார்ட்போன் ப்ளிப்கார்ட் தளத்தில் விற்பனை செய்யப்பட இருப்பது தெரியவந்துள்ளது. போக்கோ எம்2 அறிமுக நிகழ்வு செப்டம்பர் 8, மதியம் 12 மணிக்கு துவங்குகிறது.
போக்கோ எம்2 ஸ்மார்ட்போனிற்கென ப்ளிப்கார்ட் தளத்தில் மைக்ரோசைட் திறக்கப்பட்டு இருக்கிறது. அதன்படி புதிய போக்கோ எம்2 மாடல் வாட்டர்டிராப் நாட்ச், பெரிய பேட்டரி வழங்கப்பட இருப்பது தெரியவந்துள்ளது.
முந்தைய போக்கோ எம்2 ப்ரோ மாடலில் பன்ச் ஹோல் ரக டிஸ்ப்ளே வழங்கப்பட்டு இருந்தது. வரும் நாட்களில் புதிய போக்கோ ஸ்மார்ட்போன் பற்றிய விவரங்கள் வெளியாகும் என எதிர்பார்க்கலாம்.