தொழில்நுட்பம்
நோக்கியா சி3

விரைவில் இந்தியா வரும் புது நோக்கியா ஸ்மார்ட்போன்

Published On 2020-08-22 04:20 GMT   |   Update On 2020-08-22 04:20 GMT
ஹெச்எம்டி குளோபல் நிறுவனம் விரைவில் புது நோக்கியா ஸ்மார்ட்போனினை இந்திய சந்தையில் அறிமுகம் செய்ய இருக்கிறது.
 

ஹெச்எம்டி குளோபல் நிறுவனம் நோக்கியா சி3 ஸ்மார்ட்போன் விரைவில் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. முன்னதாக இதே ஸ்மார்ட்போன் சீனாவில் அறிமுகம் செய்யப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது. தற்சமயம், நோக்கியா சி3 ஸ்மார்ட்போனின் விவரங்கள் இணையத்தில் லீக் ஆகி உள்ளன.

சிறப்பம்சங்களை பொருத்தவரை நோக்கியா சி3 மாடலில் ஆக்டாகோர் பிராசஸர், 3040 எம்ஏஹெச் பேட்டரி, 8 எம்பி பிரைமரி கேமரா, 5 எம்பி செல்ஃபி கேமரா வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போனில் வழக்கமான பெசல்கள் மற்றும் பின்புறம் கைரேகை சென்சார் வழங்கப்பட்டு இருக்கிறது.



தற்சமயம் வெளியாகி இருக்கும் தகவல்களின்படி புதிய நோக்கியா ஸ்மார்ட்போன் ஒரு வருடத்திற்கு ரீபிளேஸ்மென்ட் கியாரண்டியுடன் வழங்கப்படும் என கூறப்படுகிறது. இத்துடன் 5.99 இன்ச் ஹெச்டி பிளஸ் ஸ்கிரீன், ஒரு நாள் முழுக்க நீடிக்கும் பேட்டரி, 8 எம்பி பிரைமரி கேமரா, 5 எம்பி செல்ஃபி கேமரா, கைரேகை சென்சார், ஆண்ட்ராய்டு 10 இயங்குதளம் வழங்கப்படுகிறது.

இந்திய சந்தையில் புதிய நோக்கியா சி3 ஸ்மார்ட்போன் சீனாவில் கிடைப்பதை போன்றே நார்டிக் புளூ மற்றும் கோல்டு சேண்ட் நிற ஆப்ஷன்களில் கிடைக்கும் என தெரிகிறது. தற்போதைய தகவல்களில் நோக்கியா சி3 ஸ்மார்ட்போனின் விலை விவரங்கள் இடம்பெறவில்லை. 

எனினும், இதன் விலை சீனாவில் நிர்ணயிக்கப்பட்டதை போன்றே 3 ஜிபி ரேம், 32 ஜிபி மெமரி மாடலுக்கு ரூ. 7500 வரை நிர்ணயம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
Tags:    

Similar News