தொழில்நுட்பம்
கேலக்ஸி எஸ்20 லைட்

கீக்பென்ச் தளத்தில் லீக் ஆன கேலக்ஸி எஸ்20 லைட்

Published On 2020-08-14 06:18 GMT   |   Update On 2020-08-14 06:18 GMT
சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி எஸ்20 லைட் ஸ்மார்ட்போன் விவரங்கள் கீக்பென்ச் வலைதளத்தில் லீக் ஆகி உள்ளது.


சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி எஸ்20 லைட் ஸ்மார்ட்போன் விவரங்கள் கீக்பென்ச் வலைதளத்தில் லீக் ஆகி இருக்கின்றன. அதன்படி புதிய சாம்சங் ஸ்மார்ட்போன் எக்சைனோஸ் 990 பிராசஸர் கொண்டிருக்கிறது. முந்தைய தகவல்களில் இந்த ஸ்மார்ட்போன் குவால்காம் ஸ்னாப்டிராகன் 865 பிராசஸர் கொண்டிருக்கும் என கூறப்பட்டு இருந்தது.

கீக்பென்ச் தளத்தில் சாம்சங் எஸ்எம்-ஜி780எஃப் எனும் மாடல் நம்பர் கொண்ட மாடல் இந்திய வேரியண்ட் என கூறப்படுகிறது. புதிய சாம்சங் ஸ்மார்ட்போன் கீக்பென்ச் தளத்தில் சிங்கில் மற்றும் மல்டி-கோர் டெஸ்டிங்களில் முறையே 588 மற்றும் 2448 புள்ளிகளை பெற்று இருக்கிறது. மேலும் இந்த ஸ்மார்ட்போனில் 8 ஜிபி ரேம், ஆண்ட்ராய்டு 10 இயங்குதளம் வழங்கப்படுகிறது.



சிறப்பம்சங்களை பொருத்தவரை கேலக்ஸி எஸ்20 லைட் மாடலில் 120 ஹெர்ட்ஸ் டிஸ்ப்ளே, ஐபி68 தர சான்று, குவால்காம் ஸ்னாப்டிராகன் 865 பிராசஸர், 6 ஜிபி ரேம் வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. பெயருக்கு ஏற்றார் போல் இந்த மாடல் விலை சற்றே குறைவாக நிர்ணயம் செய்யப்படும் என தெரிகிறது.

நிறங்களை பொருத்தவரை புதிய கேலக்ஸி எஸ்20 லைட் மாடல் கிரீன், ஆரஞ்சு, ரெட் மற்றும் வைட் நிறங்களில் விற்பனை செய்யப்படும் என கூறப்படுகிறது. இதே நிறங்கள் அனைத்து சந்தையிலும் விற்பனைக்கு வருமா அல்லது வேறுபடுமா என்பது தற்சமயம் கேள்விக்குறியாக இருக்கிறது. 
Tags:    

Similar News