தொழில்நுட்பம்
ஆப்பிள்

ஆப்பிள் ஐபோன் 12 வெளியீடு தாமதமாகிறது

Published On 2020-07-31 11:03 GMT   |   Update On 2020-07-31 11:03 GMT
ஆப்பிள் நிறுவனத்தின் புதிய ஐபோன் 12 சீரிஸ் வெளியீடு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.


ஐபோன் 12 சீரிஸ் வெளியீடு தாமதமாகும் என ஆப்பிள் நிறுவனம் அறிவித்து உள்ளது. ஆப்பிள் நிறுவனத்தின் சமீபத்திய காலாண்டின் வருவாய் அறிக்கையை தாக்கல் செய்யும் போது அந்நிறுவனத்தின் மூத்த நிதி அலுவலர் லுகா மேஸ்ட்ரி ஐபோன் வெளியீட்டு விவரங்களை தெரிவித்தார். 

முன்னதாக குவால்காம் நிறுவனம் உதிரிபாகங்கள் உற்பத்தியில் தாமதம் ஏற்பட்டுள்ளதால் ஐபோன் 12 சீரிஸ் வெளியீட்டில் மாற்றம் இருக்கலாம் என தெரிவித்து இருந்தது. ஐபோன் 12, ஐபோன் 12 ப்ரோ மற்றும் ஐபோன் 12 ப்ரோ மேக்ஸ் உள்ளிட்ட மாடல்கள் ஐபோன் 12 சீரசில் வெளியாகும் என தெரிகிறது.



கடந்த ஆண்டு புதிய ஐபோன் விற்பனை செப்டம்பர் மாதத்தில் துவங்கியது. இந்த ஆண்டு விநியோக திட்டம் சில வாரங்கள் வரை தாமதம் ஆகும் என மேஸ்ட்ரி தெரிவித்தார். வழக்கமாக ஆப்பிள் நிறுவனம் தனது புதிய ஐபோன்களை செப்டம்பர் மாதத்தில் வெளியிடுவதை வாடிக்கையாக கொண்டுள்ளது.

கடந்த ஆண்டு ஐபோன் 11 சீரிசிலும் பின்பற்றப்பட்டது. முன்னதாக ஐபோன் எக்ஸ் மற்றும் ஐபோன் எக்ஸ்ஆர் வெளியீடும் தாமதமாகவே துவங்கியது. வெளியீட்டில் தாமதம் ஏற்பட்டாலும் ஆப்பிள் தனது புதிய ஐபோன் சீரிஸ் மாடல்களை செப்டம்பர் மாதத்திலேயே அறிமுகம் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Tags:    

Similar News