தொழில்நுட்பம்
ஒப்போ வாட்ச்

ஒப்போ வாட்ச் இந்திய வெளியீட்டு விவரம்

Published On 2020-07-10 15:59 IST   |   Update On 2020-07-10 15:59:00 IST
ஒப்போ நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட்வாட்ச் இந்திய வெளியீட்டு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.


இந்தியாவில் ஒப்போ ரெனோ 4 ப்ரோ ஸ்மார்ட்போன் இம்மாத மூன்றாவது வாரத்தில் அறிமுகமாகலாம் என தகவல் வெளியாகி வருகிறது. புதிய ஸ்மார்ட்போனின் சரியான வெளியீட்டு தேதி இதுவரை அறிவிக்கப்படவில்லை. 

இந்நிலையில் தற்சமயம் வெளியாகி இருக்கும் தகவல்களில் ஒப்போ ரெனோ 4 ப்ரோ ஸ்மார்ட்போனுடன் ஒப்போ வாட்ச் அறிமுகம் செய்யப்பட இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. முன்னதாக ஒப்போ நிறுவனம் தனது ட்ரூ வயர்லெஸ் இயர்பட்ஸ் மாடலை இந்தியாவில் அறிமுகம் செய்தது.



ஒப்போ வாட்ச் சீன சந்தையில் மார்ச் மாத வாக்கில் அறிமுகம் செய்யப்பட்டது. ஒப்போ வாட்ச் மாடலில் AMOLED டிஸ்ப்ளே, 41எம்எம் மற்றும் 46எம்எம் என இரு மாடல்களில் கிடைக்கிறது. இவற்றில் முறையே 1.6 மற்றும் 1.9 இன்ச் டிஸ்ப்ளேக்கள் வழங்கப்பட்டுள்ளன.

புதிய ஒப்போ ஸ்மார்ட்வாட்ச் மாடலில் பிரீமியம் ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் எடிஷனும் கிடைக்கிறது. இந்த ஸ்மார்ட்வாட்ச் குவால்காம் ஸ்னாப்டிராகன் வியர் 2500 சிப்செட் கொண்டு இயங்குகிறது. புதிய ஸ்மார்ட்வாட்ச் கூகுள் வியர் ஒஎஸ் மற்றும் கலர் ஒஎஸ் இயங்குதளம் கொண்டுள்ளது. 

Similar News