தொழில்நுட்பம்
ஒன்பிளஸ் நார்டு

அமேசானில் லீக் ஆன ஒன்பிளஸ் நார்டு ஸ்மார்ட்போன் வெளியீட்டு விவரம்

Published On 2020-07-07 10:25 IST   |   Update On 2020-07-07 10:25:00 IST
ஒன்பிளஸ் நிறுவனத்தின் புதிய ஒன்பிளஸ் நார்டு ஸ்மார்ட்போனின் வெளியீட்டு விவரங்கள் அமேசான் தளத்தில் வெளியாகி உள்ளது.


ஒன்பிளஸ் நிறுவனத்தின் புதிய ஒன்பிளஸ் நார்டு ஸ்மார்ட்போன் இந்தியாவில் ஜூலை 21 ஆம் தேதி அறிமுகம் செய்யப்பட இருப்பதாக அமேசான் தளம் மூலம்  தகவல் வெளியாகி உள்ளது.

அமேசான் இந்தியா வலைதளத்தில் லீக் ஆன டீசர் வலைதள பக்கத்தில் ஒன்பிளஸ் நார்டு ஸ்மார்ட்போனின் ஏஆர் வெளியீட்டு நிகழ்வுக்கான அழைப்பிதழ் இடம்பெற்று இருக்கிறது. அதன்படி புதிய ஒன்பிளஸ் நார்டு ஸ்மார்ட்போன் ஜூலை 21 ஆம் தேதி இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட இருப்பது தெரியவந்துள்ளது.

குவால்காம் ஸ்னாப்டிராகன் 765ஜி பிராசஸர் கொண்டு உருவாகி இருக்கும் ஒன்பிளஸ் நார்டு ஸ்மார்ட்போன் விலை 500 டாலர்களுக்குள் நிர்ணயம் செய்யப்படும் என கூறப்பட்டுள்ளது.



புதிய ஸ்மார்ட்போன் வெளியீடு பற்றி ஒன்பிளஸ் சார்பில் இதுவரை எவ்வித அதிகாரப்பூர்வ தகவலும் வழங்கப்படவில்லை. எனினும், அமேசான் மூலம் ஸ்மார்ட்போனின் வெளியீட்டு தேதி விவரங்கள் வெளியாகி இருக்கிறது. 

மேலும் ஒன்பிளஸ் நார்டு ஸ்மார்ட்போன் முதற்கட்டமாக இந்தியா மற்றும் ஐரோப்பிய சந்தையில் அறிமுகம் செய்யப்பட இருப்பது குறிப்பிடத்தக்கது.

Similar News