தொழில்நுட்பம்
எல்ஜி

உலகின் முதல் ரோலபிள் ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யும் எல்ஜி

Published On 2020-07-04 05:18 GMT   |   Update On 2020-07-04 05:18 GMT
உலகின் முதல் ரோலபிள் ஸ்மார்ட்போன் மாடலை எல்ஜி நிறுவனம் அறிமுகம் செய்ய திட்டமிட்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

சாம்சங் மற்றும் ஆப்பிள் நிறுவனங்களுடனான போட்டியை எதிர்கொள்ள முயற்சிக்கும் எல்ஜி நிறுவனம் உலகின் முதல் ரோலபிள் ஸ்மார்ட்போன் மாடலை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த ஸ்மார்ட்போன் பிராஜக்ட் பி பெயரில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.

எல்ஜி நிறுவனம் கடந்த ஆண்டு விண்ணப்பித்த காப்புரிமை அடிப்படையில் பிராஜக்ட் பி ஸ்மார்ட்போன் உருவாகி வருகிறது. இந்த ஸ்மார்ட்போன் பக்கவாட்டில் நீளும் வகையிலும், தேவையற்ற போது மடித்து வைக்கும் வகையில் உருவாக்கப்பட்டு இருக்கிறது. இதற்கான ப்ரோடோடைப் மாடலை எல்ஜி உருவாக்கி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

புதிய ஸ்மார்ட்போன் எல்ஜி நிறுவனத்தின் இரண்டாவது ரோபிள் சாதனம் ஆகும். முன்னதாக எல்ஜி சிக்னேச்சர் ஒஎல்இடி டிவி ஆர் மாடலை 2019 சர்வதேச நுகர்வோர் மின்சாதன விழாவில் காட்சிப்படுத்தியது. பிராஜக்ட் பி திட்டத்தில் வளையும் தன்மை கொண்ட  ஒஎல்இடி பேனலை எல்ஜி உருவாக்கவில்லை. இதனை சீன டிஸ்ப்ளே உற்பத்தி செய்யும் பிஒஇ நிறுவனம் உற்பத்தி செய்கிறது.

ஸ்மார்ட்போன் சந்தையில் தனது இடத்தை பிடிக்க எல்ஜி நிறுவனம் பிராஜக்ட் பி திட்டத்தில் அதிக கவனம் செலுத்தி வருகிறது. இதேபோன்று முற்றிலும் வித்தியாசமான வடிவமைப்பு கொண்ட ஸ்மார்ட்போனினை விங் எனும் குறியீட்டு பெயரில் எல்ஜி உருவாக்கி வருவதாகவும் கூறப்படுகிறது. 

இத்துடன் ரெயின்போ பெயரில் மற்றொரு ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போனினை எல்ஜி இந்த ஆண்டு அறிமுகம் செய்ய இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. 
Tags:    

Similar News