தொழில்நுட்பம்
ரெட்மி 8

இந்தியாவில் ரெட்மி 8 விலை மீண்டும் உயர்வு

Published On 2020-07-03 10:38 GMT   |   Update On 2020-07-03 10:38 GMT
ரெட்மி பிராண்டின் புதிய ரெட்மி 8 ஸ்மார்ட்போன் விலை இந்தியாவில் மீண்டும் உயர்த்தப்பட்டு இருக்கிறது.


இந்தியாவில் ரெட்மி 8 ஸ்மார்ட்போனின் விலை மீண்டும் உயர்த்தப்பட்டு இருக்கிறது. தற்சமயம் இந்த ஸ்மார்ட்போன் ரூ. 9799 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. முன்னதாக கடந்த ஆண்டு அக்டோபர் மாதத்தில் இந்த ஸ்மார்ட்போன் 3 ஜிபி ரேம், 32 ஜிபி மெமரி மாடல் ரூ. 7999 விலையில் வெளியிடப்பட்டது. இதன் 4 ஜிபி ரேம், 64 ஜிபி மெமரி மாடல் ரூ. 8999 விலையில் வெளியிடப்பட்டது. 

முன்னதாக இந்த ஸ்மார்ட்போன் விலை  உயர்த்தப்பட்ட நிலையில், தற்சமயம் இதன் 4 ஜிபி ரேம், 64 ஜிபி மெமரி மாடல் விலை ரூ. 9499 இல் இருந்து ரூ. 9799 ஆக உயர்த்தப்பட்டு இருக்கிறது. தற்போதைய விலை உயர்வுக்கு ரெட்மி எவ்வித காரணமும் வழங்கவில்லை. 

ரெட்மி 8 ஸ்மார்ட்போனில் 6.2 இன்ச் ஹெச்டி பிளஸ் டாட் நாட்ச் டிஸ்ப்ளே, கார்னிங் கொரில்லா கிளாஸ் 5, ஸ்னாப்டிராகன் 439 பிராசஸர், அதிகபட்சம் 3 ஜிபி ரேம், 32 ஜிபி மெமரி, 4 ஜிபி ரேம், 64 ஜிபி மெமரி என இரண்டு வேரியண்ட்களில் கிடைக்கிறது.

புகைப்படங்களை எடுக்க 12 எம்பி பிரைமரி கேமரா, சோனி IMX363 சென்சார், 2 எம்பி டெப்த் கேமரா, 8 எம்பி செல்ஃபி கேமரா வழங்கப்பட்டுள்ளது. 

இத்துடன் ரெட்மி 8 ஸ்மார்ட்போன் ஔரா மிரர் டிசைன், பின்புறம் கைரேகை சென்சார், ஸ்பிலாஷ் ரெசிஸ்டண்ட் வசதி, டூயல் சிம் ஸ்லாட் மற்றும் மைக்ரோ எஸ்டி ஸ்லாட் கொண்டிருக்கிறது. மேலும் 5000 எம்ஏஹெச் பேட்டரி, 18 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங், யுஎஸ்பி டைப்-சி வழங்கப்பட்டுள்ளது.
Tags:    

Similar News