தொழில்நுட்பம்
ஐகூ இசட்1எக்ஸ் 5ஜி

ஐகூ இசட்1எக்ஸ் 5ஜி ஸ்மார்ட்போன் வெளியீட்டு விவரம்

Published On 2020-07-02 07:12 GMT   |   Update On 2020-07-02 07:12 GMT
ஐகூ பிராண்டின் புதிய ஐகூ இசட்1எக்ஸ் 5ஜி ஸ்மார்ட்போனின் வெளியீட்டு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.

ஐகூ பிராண்டு தனது இசட்1எக்ஸ் 5ஜி ஸ்மார்ட்போனினை ஜூலை 9 ஆம் தேதி அறிமுகமாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருக்கிறது. புதிய டீசரின்படி இசட்1எக்ஸ் 5ஜி ஸ்மார்ட்போனில் பன்ச் ஹோல் ஸ்கிரீன், பக்கவாட்டில் கைரேகை சென்சார் மற்றும் 120 ஹெர்ட்ஸ் ரிஃப்ரெஷ் ரேட் டிஸ்ப்ளே வழங்கப்படுவது தெரியவந்துள்ளது.

புதிய இசட்1எக்ஸ் 5ஜி ஸ்மார்ட்போன் இசட்1 5ஜி மாடலின் மேம்பட்ட வெர்ஷன் ஆகும். இதே ஸ்மார்ட்போன் விவரங்கள் சமீபத்தில் TENAA வலைதளத்தில் லீக் ஆனது. இந்த ஸ்மார்ட்போன் V2012A மாடல் நம்பர் கொண்டிருக்கிறது.

அதன்படி புதிய ஸ்மார்ட்போனில் 6.57 இன்ச் எஃப்ஹெச்டி பிளஸ் எல்சிடி ஸ்கிரீன், 16 எம்பி பன்ச் ஹோல் செல்ஃபி கேமரா வழங்கப்படுகிறது. 

இத்துடன் ஸ்னாப்டிராகன் 765ஜி பிராசஸர், அதிகபட்சம் 8 ஜிபி ரேம், 48 எம்பி பிரைமரி கேமரா, 2 எம்பி டெப்த் கேமரா மற்றும் 2 எம்பி மேக்ரோ கேமரா என மூன்று பிரைமரி சென்சார்கள் வழங்கப்படுகின்றன. மேலும் 5000 எம்ஏஹெச் பேட்டரி, 33 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்படும் என கூறப்படுகிறது. 

ஐகூ இசட்1எக்ஸ் 5ஜி எதிர்பார்க்கப்படும் சிறப்பம்சங்கள்

- 6.57 இன்ச் 2408x1080 பிக்சல் ஃபுல் ஹெச்டி பிளஸ் எல்சிடி டிஸ்ப்ளே
- குவாட்கோர் ஸ்னாப்டிராகன் 765ஜி பிராசஸர்
- அட்ரினோ 620 GPU
- 6ஜிபி ரேம், 64 ஜிபி மெமரி
- 8 ஜிபி ரேம், 128 ஜிபி / 256 ஜிபி மெமரி
- ஆண்ட்ராய்டு 10 மற்றும் ஐகூ யுஐ 1.0
- டூயல் சிம்
- 48 எம்பி பிரைமரி கேமரா, எல்இடி ஃபிளாஷ், EIS
- 2 எம்பி மேக்ரோ கேமரா
- 2 எம்பி டெப்த் கேமரா
- 16 எம்பி செல்ஃபி கேமரா
- பக்கவாட்டில் கைரேகை சென்சார்
- 5ஜி, டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5.1
- யுஎஸ்பி டைப் சி
- 5000 எம்ஏஹெச் பேட்டரி
- 33 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங்
Tags:    

Similar News