தொழில்நுட்பம்
கேலக்ஸி எஸ்20 பிளஸ் மற்றும் கேலக்ஸி பட்ஸ் பிளஸ் பிடிஎஸ்

சாம்சங் கேலக்ஸி எஸ்20 பிளஸ், பட்ஸ் பிளஸ் பிடிஎஸ் எடிஷன் இந்தியாவில் அறிமுகம்

Published On 2020-07-01 06:27 GMT   |   Update On 2020-07-01 06:27 GMT
சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி எஸ்20 பிளஸ், கேலக்ஸி பட்ஸ் பிளஸ் பிடிஎஸ் எடிஷன் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது.


சாம்சங் நிறுவனம் கேலக்ஸி எஸ்20 பிளஸ் மற்றும் கேலக்ஸி பட்ஸ் பிளஸ் வயர்லெஸ் ஹெட்செட் மாடல்களின் பிடிஎஸ் எடிஷன்கள் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது. இவற்றின் விலை முறையே ரூ. 87999 மற்றும் ரூ. 14990 என நிர்ணயம் செய்யப்பட்டு இருக்கிறது.

இத்துடன் கேலக்ஸி எஸ்20 அல்ட்ரா ஸ்மார்ட்போன் புதிய கிளவுட் வைட் வேரியண்ட் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. இதன் விலை ரூ. 97,9999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இவற்றின் விற்பனை ஜூலை 10 ஆம் தேதி துவங்குகிறது. 

சாம்சங் கேலக்ஸி எஸ்20 பிளஸ் பிடிஎஸ் எடிஷன்களில் பிடிஎஸ் சார்ந்த தீம்கள் மறஅறும் ஃபேன் கம்யூனிட்டி பிளாட்பார்ம், விவெர்ஸ் உள்ளிட்டவை பிரீ-இன்ஸ்டால் செய்யப்பட்டு இருக்கிறது. இத்துடன் டிகோரேட்டிவ் ஸ்டிக்கர்கள், போட்டோ கார்டுகள் உள்ளிட்டவையும் வழங்கப்படுகின்றன.

இதில் பர்ப்பிள் கிளாஸ் மற்றும் மெட்டல் வெளிப்புறம் கொண்டிருக்கிறது. கேலக்ஸி பட்ஸ் பிளஸ் பிடிஎஸ் எடிஷன் மற்றும் பட்ஸ் பிளஸ் சார்ஜிங் கேஸ் பர்ப்பிள் நிறங்களில் கிடைக்கிறது. மேலும் இதில் பிராண்டு லோகோ மற்றும் பர்ப்பிள் ஹார்ட் ஐகோன்கிராஃபி வழங்கப்பட்டு இருக்கிறது.
Tags:    

Similar News