தொழில்நுட்பம்
ரெட்மி

பட்ஜெட் விலையில் உருவாகும் என்ட்ரி லெவல் ரெட்மி 5ஜி ஸ்மார்ட்போன்

Published On 2020-05-26 11:56 GMT   |   Update On 2020-05-27 03:50 GMT
சியோமியின் ரெட்மி பிராண்டு என்ட்ரி லெவல் 5ஜி ஸ்மார்ட்போனினை பட்ஜெட் விலையில் உருவாகி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.



குவால்காம் நிறுவனம் 5ஜி வசதி கொண்ட ஸ்னாப்டிராகன் 600 சீரிஸ் பிராசஸரை உருவாக்கி வருவதாக கடந்த வாரம் தகவல் வெளியானது. இந்நிலையில், தற்சமயம் கிடைத்திருக்கும் தகவல்களில் ரெட்மி ஸ்மார்ட்போன் மாடலில் புதிய பிராசஸர் வழங்கப்பட இருப்பதாக கூறப்படுகிறது.

புதிய ரெட்மி ஸ்மார்ட்போன் ஸ்னாப்டிராகன் எஸ்எம்6350 சிப் மற்றும் 5ஜி மோடெம் கொண்டிருக்கும் என தகவல் வெளியாகியுள்ளது. ரெட்மி 5ஜி ஸ்மார்ட்போன் மாடல்கள் தற்போதைய 4ஜி மாடல் விலையிலேயே கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தற்போதைய தகவல்களின் படி ரெட்மி 5ஜி ஸ்மார்ட்போன் விலை 150 டாலர்கள், இந்திய மதிப்பில் சுமார் 11 ஆயிரம் ரூபாய் வரை நிர்ணயம் செய்யப்படலாம் என கூறப்படுகிறது. இந்த விலையிலும் ரெட்மி ஸ்மார்ட்போன் அதிவேக 5ஜி வசதி வழங்கும் என தெரிகிறது.



அதிவேக 5ஜி தவிர புதிய ஸ்மார்ட்போன் எல்சிடி ஸ்கிரீன், மூன்று அல்லது நான்கு கேமரா சென்சார்கள், 4000 எம்ஏஹெச் பேட்டரி, 18 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்படலாம் என கூறப்படுகிறது.

குவால்காம் தவிர மீடியாடெக் மற்றும் ஹூவாய் போன்ற நிறுவனங்களும் குறைந்த விலையில் 5ஜி பிராசஸர்களை வெளியிட இருக்கின்றன. இவை முறையே எம்டி6853 5ஜி மற்றும் கிரின் 720 5ஜி என அழைக்கப்படும் என தெரிகிறது. இதே போன்று சாம்சங் நிறுவனமும் எக்சைனோஸ் 880 5ஜி பிராசஸரின் குறைந்த விலை மாடலை வெளியிட இருக்கிறது.
Tags:    

Similar News