தொழில்நுட்பம்
நோக்கியா 9 பியூர்வியூ

புதிய நோக்கியா ஸ்மார்ட்போனில் 8கே வீடியோ வசதி வழங்கப்படும் என தகவல்

Published On 2020-05-13 07:11 GMT   |   Update On 2020-05-13 07:11 GMT
ஹெச்எம்டி குளோபல் நிறுவனத்தின் புதிய நோக்கியா ஸ்மார்ட்போனில் 8கே வீடியோ பதிவு செய்யும் வசதி வழங்கப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
 


ஹெச்எம்டி குளோபல் நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்படும் ஸ்மார்ட்போன்களில் ஒன்றாக நோக்கியா 9.3 பியூர்வியூ இருக்கிறது. புதிய மாடல் பற்றி இதுவரை அதிகாரப்பூர்வமாக எந்த தகவலும் வெளியாகவில்லை. எனினும், இதன் விவரங்கள் இணையத்தில் லீக் ஆகி வருகின்றன.

அந்த வரிசையில், தற்சமயம் கிடைத்திருக்கும் தகவல்களில் நோக்கியா 9.3 பியூர்வியூ ஸ்மார்ட்போனில் 120 ஹெர்ட்ஸ் டிஸ்ப்ளே, 108 எம்பி பிரைமரி கேமரா வழங்கப்படும் என கூறப்படுகிறது. இத்துடன் 8கே வீடியோ பதிவு செய்யும் வசதி வழங்கப்படும் என்றும் கூறப்படுகிறது.



தற்போதைய தகவல்களின் படி நோக்கியா 9.3 பியூர்வியூ ஸ்மார்ட்போனில் நொடிக்கு 30 ஃபிரேம் வேகத்தில் 8கே வீடியோக்களை படமெடுக்கும் வசதி வழங்கப்படும் என கூறப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போனில் இரண்டு கேமரா மோட்கள் ப்ரோ மற்றும் நைட் எனும் பெயர்களில் வழங்கப்படும் என்றும் கூறப்படுகிறது. 

ப்ரோ மோடில் மேம்பட்ட கண்ட்ரோல்கள் வழங்கப்படும் என்றும் நைட் மோடில் இரவு நேரங்கள் மற்றும் வெளிச்சமற்ற பகுதிகளில் சிறப்பாக செயல்படும் என தெரிகிறது. இவைதவிர நோக்கியா 9.3 பியூர்வியூ ஸ்மார்ட்போனில் பிரத்யேக செய்ஸ் எஃபெக்ட்கள் வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

நோக்கியா 9.3 பியூர்வியூ ஸ்மார்ட்போன் பிப்ரவரி மாதம் பார்சிலோனாவில் நடைபெற இருந்த 2020 சர்வதேச மொபைல் காங்கிரஸ் விழாவில் அறிமுகம் செய்யப்பட இருந்தது. எனினும், கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக இவ்விழா ரத்து செய்யப்பட்டது. இதன்பின் புதிய நோக்கியா ஸ்மார்ட்போன் வெளியீடு பற்றி எந்த தகவலும் வழங்கப்படவில்லை.
Tags:    

Similar News