தொழில்நுட்பம்
சாம்சங் கேலக்ஸி எஸ்10

சாம்சங் கேலக்ஸி எஸ்11 சீரிஸ் வெளியீட்டு விவரம்

Published On 2019-12-12 04:30 GMT   |   Update On 2019-12-12 04:30 GMT
சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி எஸ்11 சீரிஸ் மற்றும் கேலக்ஸி ஃபோல்டு ஸ்மார்ட்போன்களின் வெளியீட்டு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.



சாம்சங் நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்படும் கேலக்ஸி எஸ்11, கேலக்ஸி எஸ்11 பிளஸ், கேலக்ஸி எஸ்11இ ஸ்மார்ட்போன் மாடல்களின் விவரங்கள் கடந்த சில வாரங்களாக இணையத்தில் வெளியாகி வருகின்றன. இத்துடன் கேலக்ஸி ஃபோல்டு 2 ஸ்மார்ட்போன் பற்றிய விவரங்களும் அவ்வப்போது வெளியாகியுள்ளன.

சாம்சங் வழக்கப்படி புதிய கேலக்ஸி எஸ்11 சீரிஸ் மற்றும் கேலக்ஸி ஃபோல்டு 2 ஸ்மார்ட்போன்கள் சர்வதேச மொபைல் காங்கிரஸ் (MWC 2020) நிகழ்வுக்கு முன் அறிமுகம் செய்யப்படுகிறது. அந்த வகையில் தற்சமயம் வெளியாகி இருக்கும் தகவல்களில் கிளாம்ஷெல் வடிவமைப்பு கொண்ட கேலக்ஸி ஃபோல்டு 2 ஸ்மார்ட்போன் பிப்ரவரி 18, 2020 தேதியில் அமெரிக்காவின் சான் ஃபிரான்சிஸ்கோ நகரில் அறிமுகம் செய்யப்பட இருப்பதாக கூறப்பட்டுள்ளது.



இந்த தகவல் அதிகாரப்பூர்வமாக வெளியாகவில்லை என்ற போதும், இது உண்மையாகும் பட்சத்தில் கேலக்ஸி எஸ்11 சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் சர்வதேச மொபைல் காங்கிரஸ் விழாவுக்கு முன் அறிமுகமாகிவிடும். அடுத்த ஆண்டு சர்வதேச மொபைல் காங்கிரஸ் விழா பிப்ரவரி 24 ஆம் தேதி துவங்கி பிப்ரவரி 27 ஆம் தேதி வரை நடைபெற இருக்கிறது.

இதுவரை கிடைத்திருக்கும் தகவல்களின் படி கேலக்ஸி எஸ்11 ஸ்மார்ட்போனில் 108 எம்பி பிரைமரி கேமரா, 5x டெலிபோட்டோ லென்ஸ், அல்ட்ரா வைடு ஆங்கில் லென்ஸ், 3D டைம் ஆஃப் ஃபிளைட் கேமரா வழங்கப்படும் என கூறப்படுகிறது.

கேலக்ஸி எஸ்11 பிளஸ் ஸ்மார்ட்போனில் 5000 எம்ஏஹெச் பேட்டரி, 6.9 இன்ச் வளைந்த டைனமிக் AMOLED டிஸ்ப்ளே வழங்கப்படும் என கூறப்படுகிறது. இத்துடன் இந்த ஸ்மார்ட்போனின் மத்தியில் பன்ச் ஹோல் கேமரா வழங்கப்படும் என தெரிகிறது.

புகைப்படம் நன்றி: OnLeaksx@Pricebaba

Tags:    

Similar News