தொழில்நுட்பம்
நோக்கியா 2.3

இரட்டை கேமரா கொண்ட நோக்கியா 2.3 ஸ்மார்ட்போன் அறிமுகம்

Published On 2019-12-06 06:02 GMT   |   Update On 2019-12-06 10:59 GMT
ஹெச்.எம்.டி. குளோபல் நிறுவனம் நோக்கியா 2.3 ஆண்ட்ராய்டு ஒன் ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்துள்ளது.



ஹெச்.எம்.டி. குளோபல் நிறுவனம் நோக்கியா 2.3 ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்துள்ளது. புதிய ஸ்மார்ட்போனில் 6.2 இன்ச் ஹெச்.டி. பிளஸ் ஸ்கிரீன், மீடியாடெக் ஹீலியோ ஏ22 பிராசஸர், 2 ஜி.பி. ரேம், ஆண்ட்ராய்டு 9 பை இயங்குதளம் வழங்கப்பட்டுள்ளது.

புகைப்படங்களை எடுக்க 13 எம்.பி. பிரைமரி கேமரா, ஏ.ஐ. லோ-லைட் அம்சம், ஹெச்.டி.ஆர். வசதி, 2 எம்.பி. டெப்த் கேமரா வழங்கப்பட்டுள்ளது. முன்புறம் 5 எம்.பி. செல்ஃபி கேமரா, ஃபேஸ் அன்லாக் வசதி வழங்கப்பட்டுள்ளது. பிரத்யேக கூகுள் அசிஸ்டண்ட் பட்டன் கொண்டிருக்கும் நோக்கியா 2.3 ஸ்மார்ட்போனில் டூயல் சிம் ஸ்லாட், மைக்ரோ எஸ்.டி. ஸ்லாட் வழங்கப்பட்டுள்ளது.



நோக்கியா 2.3 சிறப்பம்சங்கள்:

- 6.2-இன்ச் 720x1520 பிக்சல் ஹெச்.டி. பிளஸ் 2.5D வளைந்த கிளாஸ் டிஸ்ப்ளே
- 2 ஜிகாஹெர்ட்ஸ் குவாட்-கோர் மீடியாடெக் ஹீலியோ ஏ22 பிராசஸர்
- IMG பவர் வி.ஆர். GE-கிளாஸ் GPU
- 2 ஜி.பி. ரேம்
- 32 ஜி.பி. மெமரி
- மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
- டூயல் சிம்
- ஆண்ட்ராய்டு 9.0 பை இயங்குதளம்
- 13 எம்.பி. பிரைமரி கேமரா, எல்.இ.டி. ஃபிளாஷ், f/2.2
- 2 எம்.பி. இரண்டாவது பிரைமரி கேமரா
- 5 எம்.பி. செல்ஃபி கேமரா, f/2.4
- 3.5 எம்.எம். ஹெட்போன் ஜாக்
- எஃப்.எம். ரேடியோ
- டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்
- மைக்ரோ யு.எஸ்.பி.
- 4000 எம்.ஏ.ஹெச். பேட்டரி

நோக்கியா 2.2 ஸ்மார்ட்போன் சியான் கிரீன், சேண்ட் மற்றும் சார்கோல் நிறங்களில் கிடைக்கிறது. இதன் விலை 109 யூரோ (இந்திய மதிப்பில் ரூ. 8,625) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. சர்வதேச சந்தையில் இதன் விற்பனை விரைவில் துவங்கும் என தெரிகிறது.

Tags:    

Similar News