தொழில்நுட்பம்

இந்தியாவில் சாம்சங் கேலக்ஸி ஸ்மார்ட்போனின் விலை ரூ.3000 வரை குறைப்பு

Published On 2019-02-07 06:31 GMT   |   Update On 2019-02-07 06:31 GMT
சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி ஏ9 (2018) ஸ்மார்ட்பரோனின் விலை இந்தியாவில் மீண்டும் குறைக்கப்பட்டுள்ளது. #GalaxyA9 #Smartphone



சாம்சங் நிறுவனம் தனது கேலக்ஸி ஏ9 (2018) ஸ்மார்ட்போனின் விலையை மீண்டும் குறைத்துள்ளது. இந்தியாவில் ரூ.36,990 விலையில் அறிமுகமான கேலக்ஸி ஏ9 (2018) ஸ்மார்ட்போனின் விலை முன்னதாக ரூ.3,000 குறைக்கப்பட்டு ரூ.33,990 விலையில் விற்பனை செய்யப்பட்டது. 

இந்நிலையில், கேலக்ஸி ஏ9 (2018) ஸ்மார்ட்போனின் விலை மீண்டும் குறைக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் கேலக்ஸி ஏ9 (2018) ஸ்மார்ட்போன் தற்சமயம் ரூ.30,990 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. கேலக்ஸி ஏ9 (2018) ஸ்மார்ட்போன் நான்கு கேமரா சென்சார் கொண்ட சாம்சங் நிறுவனத்தின் முதல் ஸ்மார்ட்போன் ஆகும். இதில் வழக்கமான கேமரா சென்சார், வைடு-ஆங்கிள் சென்சார், டெலிஃபோட்டோ சென்சார் மற்றும் டெப்த் சென்சார் உள்ளிட்டவை வழங்கப்பட்டிருக்கிறது.

சாம்சங் இந்தியா அதிகாரப்பூர்வ வலைதளத்தில் கேலக்ஸி ஏ9 (2018) ஸ்மார்ட்போனின் புதிய விலை ஏற்கனவே அமலாகிவிட்டது. சமீபத்திய விலை குறைப்பு நிரந்தரமானது தான் என கூறப்படுகிறது. கேலக்ஸி ஏ9 (2018) ஸ்மார்ட்போனின் விலை அடிக்கடி குறைக்கப்படுவதால், அந்நிறுவனம் புதிய 2019 கேலக்ஸி ஏ9 ஸ்மார்ட்போனினை வெளியிட இருப்பதை உணர்த்துவதாக தெரிகிறது.



சாம்சங் கேலக்ஸி ஏ9 (2018) ஸ்மார்ட்போனில் 6.3 இன்ச் ஃபுல் ஹெச்.டி. பிளஸ் சூப்பர் AMOLED ஸ்கிரீன், ஸ்னாப்டிராகன் 710 பிராசஸர், 8 ஜி.பி. ரேம், பின்புறம் கைரேகை சென்சார் மற்றும் 3800 எம்.ஏ.ஹெச். பேட்டரி வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் வழங்கப்பட்டுள்ளது.

புகைப்படங்களை எடுக்க 24 எம்.பி சென்சார்,  f/1.7, 10 எம்.பி. டெலிபோட்டோ லென்ஸ், f/2.4, 8 எம்.பி. அல்ட்ரா வைடு லென்ஸ் மற்றும் 5 எம்.பி கேமரா டெப்த் விவரங்களை படம்பிடிக்க ஏதுவாக வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் 24 எம்.பி. செல்ஃபி கேமரா, f/2.0 அப்ரேச்சர் கொண்டுள்ளது.



சாம்சங் கேலக்ஸி ஏ9 (2018) சிறப்பம்சங்கள்:

- 6.3 இன்ச் 1080x2220 பிக்சல் ஃபுல் ஹெச்.டி. பிளஸ் சூப்பர் AMOLED இன்ஃபினிட்டி டிஸ்ப்ளே
- ஆக்டா-கோர் ஸ்னாப்டிராகன் 710 10nm பிராசஸர்
- அட்ரினோ 616 GPU
- 6 ஜி.பி. / 8 ஜி.பி. ரேம்
- 128 ஜி.பி. மெமரி
- மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
- ஆன்ட்ராய்டு 8.0 ஓரியோ
- டூயல் சிம் ஸ்லாட்
- 24 எம்.பி. பிரைமரி கேமரா, எல்.இ.டி. ஃபிளாஷ், f/1.7 aperture
- 10 எம்.பி. டெலிபோட்டோ லென்ஸ், f/2.4
- 8 எம்.பி. அல்ட்ரா வைடு லென்ஸ் கேமரா
- 5 எம்.பி டெப்த் கேமரா
- 24 எம்.பி. செல்ஃபி கேமரா f/2.0
- கைரேகை சென்சார்
- 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்
- 3800 எம்.ஏ.ஹெச். பேட்டரி
- அடாப்டிவ் ஃபாஸ்ட் சார்ஜிங்

Tags:    

Similar News