தொழில்நுட்பம்

ஐந்து கேமரா கொண்ட நோக்கியா ஸ்மார்ட்போன்

Published On 2018-09-07 08:24 GMT   |   Update On 2018-09-07 08:24 GMT
ஐந்து கேமரா செட்டப் கொண்ட நோக்கியாவின் புதிய ஸ்மார்ட்போன் புகைப்படம் இணையத்தில் லீக் ஆகியுள்ளது. #nokia9 #smartphone



ஐந்து கேமரா சென்சார் கொண்ட நோக்கியா ஸ்மார்ட்போனின் விவரங்கள் அவ்வப்போது இணையத்தில் லீக் ஆகிவந்த நிலையில், இம்முறை ஸ்மார்ட்போனின் புகைப்படம் லீக் ஆகியுள்ளது.

முன்னதாக வெளியான தகவல்களில் ஃபாக்ஸ்கான் இந்த ஸ்மார்ட்போனினை வடிவமைத்து உற்பத்தி செய்யும் என தெரிவிக்கப்பட்டு இருந்தது. தற்சமயம் ஸ்மார்ட்போனின் ப்ரோடோடைப் புகைப்படம் சீனாவில் லீக் ஆகி இருக்கிறது.

புதிய ப்ரோடோடைப் புகைப்படத்தில் TA-1094 என்ற மாடல் நம்பர் இடம்பெற்றிருக்கும் நிலையில், இந்த ஸ்மார்ட்போன் நோக்கியா 9 என்ற பெயரில் அடுத்த ஆண்டின் துவக்கத்தில் அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.



பின்புறம் ஐந்து கேமரா லென்ஸ் 1-1-3 என்ற அடிப்படையில் பொருத்தப்பட்டு ஒன்றில் எல்.இ.டி. ஃபிளாஷ் இடம்பெற்றுள்ளது. பின்புறம் வட்ட வடிவில் சீராக ஐந்து கேமரா லென்ஸ் மட்டும் காணப்படும் நிலையில், கைரேகை சென்சார் இடம்பெறவில்லை.

அந்த வகையில் ஆப்பிள் நிறுவனம் போன்று 3டி ஃபேஸ் அன்லாக் அல்லது இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார் தொழில்நுட்பம் வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

சிறப்பம்சங்களை பொருத்த வரை 5.9 இன்ச் குவாட் ஹெச்.டி. OLED ஸ்கிரீன், ஸ்னாப்டிராகன் 845 பிராசஸர், 8 ஜிபி ரேம் மற்றும் OZO ஆடியோ உள்ளிட்டவை வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. 

சமீபத்தில் ஹெச்.எம்.டி. குளோபல் நிறுவனம் பியூர் வியூ பிரான்டை கைப்பற்றியது. இதே பிரான்டினை நோக்கியா விற்பனையை மைக்ரோசாஃப்ட் கைப்பற்றியதும் வாங்கியிருந்தது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News