தொழில்நுட்பம்

பெங்களூருவில் மைக்ரோசாஃப்ட் செயற்கை நுண்ணறிவு மாநாடு

Published On 2018-03-25 10:26 GMT   |   Update On 2018-03-25 10:26 GMT
மைக்ரோசாஃப்ட் நிறுவனம் இந்தியாவில் செயற்கை நுண்ணறிவு மாநாட்டை கர்நாடக மாநில தலைநகரில் நடத்த திட்டமிட்டுள்ளது.
புதுடெல்லி:

மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் 'ஏ.ஐ. ஃபார் ஆல்' (AI for All) நிகழ்வை மார்ச் 28-ம் தேதி பெங்களூருவில் நடத்துகிறது. இந்நிகழ்வில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்திற்கான பயன்பாடு குறித்த விவாதங்கள் நடைபெற இருக்கிறது.

விவாதங்களில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் பயன்பாடுகள், மக்களின் வாழ்க்கை தரத்தை முன்னேற்ற இந்த தொழில்நுட்பத்தை எவ்வாறு பயன்படுத்தலாம் உள்ளிட்ட தலைப்புகள் இடம்பெறுவதாக மைக்ரோசாஃப்ட் இந்தியா செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார். 

மைக்ரோசாஃப்ட் சார்பில் இவ்வாறான நிகழ்வு இந்தியாவில் நடைபெற இருப்பது இதுவே முதல் முறை என்றும், கடந்த ஆண்டு செயற்கை நுண்ணறிவு சார்ந்த நிகழ்வு டெவலப்பர்களுக்காக நடத்தப்பட்டது. இந்த ஆண்டு அதிகம் பேர் பயன்பெறும் நோக்கில் இந்நிகழ்வு நடைபெற இருப்பதாக அவர் மேலும் தெரிவித்தார்.

மருத்தும், ஆட்டோமொபைல், தகவல் தொழில்நுட்பம் மற்றும் பல்வேறு பிரிவுகளில் இயங்கி வரும் நிறுவனங்களில் பணியாற்றி வரும் பிரதநிதிகள் கலந்து கொள்வவர் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிகழ்வில் மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் இந்திய மற்றும் சர்வதேச பிரதிநிதிகள் கலந்து கொண்டு உரையாற்றுகின்றனர்.

பிரதிநிதிகள் மட்டுமின்றி மைக்ரோசாஃப்ட் கூட்டணி நிறுவனங்கள்ம மற்றும் வாடிக்கையாளர்களும் இந்நிகழ்வில் உரையாற்றி, வெவ்வேறு பிரிவுகளில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் பயன்பாடு குறித்து பேசவுள்ளனர். இந்நிகழ்வில் செயற்கை நுண்ணறிவு சார்ந்து டிசைன் திங்கிங் வொர்க்ஷாப் நடைபெற இருக்கிறது. 
Tags:    

Similar News