அறிந்து கொள்ளுங்கள்

இரண்டு நாள் டைம் எடுத்துக்கோங்க - வாட்ஸ்அப் சூப்பர் அப்டேட்!

Published On 2022-08-09 08:24 GMT   |   Update On 2022-08-09 08:24 GMT
  • உலகம் முழுவதும் பல கோடி மக்கள் பயன்படுத்தி வரும் குறுந்தகவல் செயலி வாட்ஸ்அப்.
  • இதில் பயனர்களுக்கு தொடர்ந்து பல்வேறு புதிய அம்சங்கள் வழங்கப்பட்டு வருகிறது.

உலகின் முன்னணி குறுந்தகவல் செயலி வாட்ஸ்அப். சந்தையில் டெலிகிராம், சிக்னல் மற்றும் சில குறுந்தகவல் செயலிகளுக்கு போட்டியை ஏற்படுத்தும் வகையில் வாட்ஸ்அப் தொடர்ந்து புதுப்புது அம்சங்களை தனது பயனர்களுக்கு வழங்கி வருகிறது.

அந்த வகையில் வாட்ஸ்அப் இன்று வெளியிட்டு இருக்கும் புதிய அப்டேட் பயனர்கள் அனுப்பிய குறுந்தகவல்களை இரண்டு நாட்கள் கழித்தும் அழிக்க வழி வகுக்கிறது. இந்த புது அம்சமாகும் கடந்த ஜுலை மாத வாக்கில் சோதனை செய்யப்பட்டது. இந்த அம்சம் வாட்ஸ்அப் பீட்டா வெர்ஷன் 2.22.15.8-இல் வழங்கப்பட்டு இருந்தது.

பீட்டா டெஸ்டிங் நிறைவு பெற்றதை அடுத்து இந்த அம்சம் தற்போது செயலியின் ஸ்டேபில் வெர்ஷனில் பலருக்கும் வழங்கப்பட்டு வருகிறது. முன்னதாக வாட்ஸ்அப் செயலியில் அனுப்பிய குறுந்தகவல்களை அழிக்க அதிகபட்சமாக 1 மணி நேரம் 8 நிமிடங்கள் மற்றும் 16 நொடிகளாக இருந்தது.

பின் இந்த அளவு தற்போது இரண்டு நாட்கள் 12 மணி நேரமாக அதிகரிக்கப்பட்டு இருக்கிறது. இதன் மூலம் அனுப்பிய குறுந்தகவல்களை அதிக பொறுமையாக அழித்துக் கொள்ள முடியும்.

Tags:    

Similar News