அறிந்து கொள்ளுங்கள்

இனி ஒன்றல்ல மூன்று.. வாட்ஸ்அப்-இல் அறிமுகமான புது அம்சம் - எதற்கு தெரியுமா?

Published On 2024-03-23 12:52 GMT   |   Update On 2024-03-23 12:52 GMT
  • பயனர்கள் எளிதில் மிகமுக்கிய தகவல்களை இயக்கிட முடியும்.
  • சமீபத்தில் பின் செய்யப்படும் தகவல் சாட்களில் முதலில் தெரியும்.

வாட்ஸ்அப் செயலியில் ஒரே சமயம் மூன்று குறுந்தகவல்களை பின் செய்து கொள்ளும் வசதி வழங்கப்படுகிறது. இந்த அம்சம் மூலம் பயனர்கள் உரையாடல், காண்டாக்ட் அல்லது க்ரூப்-இல் ஒற்றை மெசேஜை பின் செய்வதற்கான வசதி வழங்கப்பட்டுள்ளது.

தற்போது மார்க் ஜூக்கர்பர்க் தனது அதிகாரப்பூர்வ வாட்ஸ்அப் சேனலில் வெளியிட்டுள்ள தகவலின் படி பயனர்கள் சாட் ஒன்றில் அதிக குறுந்தகவல்களை பின் செய்து கொள்ளலாம். இதன் மூலம் பயனர்கள் எளிதில் மிகமுக்கிய தகவல்களை இயக்கிட முடியும்.

 


பயனர்கள் டெக்ஸ்ட் (Text), புகைப்படம் (Image) அல்லது கருத்து கணிப்பு (Polls) உள்ளிட்டவைகளை பின் செய்ய முடியும். இப்படி பின் செய்யப்படும் மெசேஜ்கள் 24 மணி நேரம், 7 நாட்கள் அல்லது 30 நாட்கள் வரை சாட்களின் மேல் பேனர் போன்று காட்சியளிக்கும். அதிக குறுந்தகவல்களை பின் செய்யும் போது, சமீபத்தில் பின் செய்யப்படும் தகவல் சாட்களில் முதலில் தெரியும்.

குறுந்தகவல்களை பின் செய்ய, குறிப்பிட்ட மெசேஜ்-ஐ அழுத்தி பிடித்து "பின்" (Pin) ஆப்ஷனை க்ளிக் செய்து எவ்வளவு நேரம் பின் செய்யப்பட வேண்டும் என்பதை தேர்வு செய்ய வேண்டும்.

ஆண்ட்ராய்டில் இந்த அம்சத்தை இயக்க மெசேஜ்-ஐ அழுத்தி பிடித்து மோர் ஆப்ஷன்ஸ் (More Options) - பின் (Pin) - எவ்வளவு நேரம் காண்பிக்கப்பட வேண்டும் என்பதை தேர்வு செய்து பின் (Pin) ஆப்ஷனை க்ளிக் செய்ய வேண்டும்.

ஐபோனில் இந்த அம்சத்தை இயக்க மெசேஜ்-ஐ அழுத்தி பிடித்து மோர் ஆப்ஷன்ஸ் (More Options) - பின் (Pin) - எவ்வளவு நேரம் காண்பிக்கப்பட வேண்டும் என்பதை தேர்வு செய்ய வேண்டும்.

வெப் மற்றும் டெஸ்க்டாப்-இல் இந்த அம்சத்தை இயக்க மெசேஜ்-ஐ க்ளிக் செய்து மெனு ஆப்ஷனில் பின் மெசேஜ் (Pin Message) - எவ்வளவு நேரம் காண்பிக்கப்பட வேண்டும் என்பதை தேர்வு செய்து பிறகு பின் (Pin) ஆப்ஷனை க்ளிக் செய்ய வேண்டும்.

க்ரூப் சாட் பின் செய்யும் முறை:

க்ரூப் சாட்களில் மெசேஜ்களை பின் செய்ய க்ரூப் அட்மின்கள் அனுமதிக்க முடியும். மெசேஜ் பின் செய்யப்படுவதை சிஸ்டம் மெசேஜ் க்ரூப் பயனர்களுக்கு தெரிவிக்கும். எனினும், மெசேஜ் பின் செய்யப்பட்ட பிறகு க்ரூப்-இல் சேர்க்கப்படுவோருக்கு இது தெரியாது.

Tags:    

Similar News