கணினி
null

உலகளவில் வெளியான டுவிட்டர் புளூ சேவை.. இந்த தேதியில் இருந்து வெரிஃபைடு டிக் இருக்காது!

Published On 2023-03-24 08:09 GMT   |   Update On 2023-03-24 09:42 GMT
  • டுவிட்டர் புளூ சந்தா முதற்கட்டமாக உலகின் தேர்வு செய்யப்பட்ட 50 நாடுகளில் மட்டுமே வழங்கப்பட்டு இருந்தது.
  • உலகளவில் டுவிட்டர் புளூ வெளியானதை அடுத்து டுவிட்டரில் பழைய வெரிஃபைடு திட்டம் நிறுத்தப்படுகிறது.

ஏப்ரல் 1, 2023 முதல் டுவிட்டரில் அக்கவுண்ட்களை வெரிஃபை செய்யும் நடைமுறை நிறுத்தப்படுகிறது. டுவிட்டர் புளூ சந்தா அமலுக்கு வரும் முன் தங்களின் அக்கவுண்ட்களை வெரிஃபைடு செய்து புளூ டிக் பெற்றவர்களுக்கு ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் புளூ டிக் நீக்கப்படும் என டுவிட்டர் அறிவித்து இருக்கிறது.

சர்வதேச சந்தையில் சில நாடுகளில் படிப்படியாக கொண்டுவரப்பட்ட டுவிட்டர் புளூ சந்தா முறை தற்போது உலகளவில் வெளியாகி விட்டது. புதிய அப்டேட்டின் மூலம் டுவிட்டர் ஏற்கனவே சரிபார்க்கப்பட்டு வழங்கப்பட்டு இருந்த வெரிஃபைடு செக்மார்க் நீக்கப்படுகிறது.

எலான் மஸ்க் டுவிட்டர் நிறுவனத்தை வாங்கிய பின் அறிமுகம் செய்யப்பட்ட புதிய மாற்றங்களின் படி டுவிட்டர் புளூ சந்தா பயனர்களுக்கு ஏராளமான அம்சங்களை பிரத்யேகமாக வழங்குகிறது. இதில், வெரிஃபைடு செக்மார்க், டுவிட் உரையாடல்களுக்கு முன்னுரிமை, குறைந்த விளம்பரங்கள், புக்மார்க் ஃபோல்டர்கள், நேவிகேஷனை கஸ்டமைஸ் செய்யும் வசதி, டுவிட்களை எடிட் மற்றும் அண்டு செய்யும் வசதி இடம்பெற்று இருக்கிறது.

இத்துடன் அதிகபட்சம் 4 ஆயிரம் எழுத்துக்களில் டுவிட் செய்யும் வசதி வழங்கப்படுகிறது. முன்னதாக டுவிட்டர் புளூ சந்தா உலகின் தேர்வு செய்யப்பட்ட 50 நாடுகளில் மட்டுமே வழங்கப்பட்டு இருந்தது. தற்போது உலகம் முழுக்க டுவிட்டர் புளூ சந்தா பயன்பாட்டுக்கு வந்துள்ளது.

உலகளவில் டுவிட்டர் புளூ வெளியாகி இருப்பதை அடுத்து டுவிட்டர் நிறுவனம் தனது பழைய வெரிஃபைடு திட்டத்தை நிறுத்துகிறது. பழைய வழக்கப்படி டுவிட்டர் பயனர்களின் ஐடி மற்றும் பொது மக்கள் இடையே பிரபலமாக இருப்போருக்கு குறிப்பிட்ட சில கட்டுப்பாடுகளின் கீழ் வெரிஃபைடு வழங்கப்பட்டு இருந்தது.

Tags:    

Similar News