அறிந்து கொள்ளுங்கள்

அடுத்த 2 மாதங்களில் இந்தியாவில் ஸ்டார்லிங்க் இணைய சேவை.. மாதக் கட்டணம் எவ்வளவு?

Published On 2025-06-10 05:02 IST   |   Update On 2025-06-10 05:02:00 IST
  • கடந்த வாரம் தொலைத்தொடர்புத் துறையிடம் (DoT) உரிமம் பெற்றது.
  • தொலைதூரப் பகுதிகளுக்கு அதிவேக இணைய இணைப்பு வழங்குவதே ஸ்டார்லிங்கின் முக்கிய நோக்கம்.

எலான் மஸ்கின் செயற்கைக்கோள் இணைய சேவை நிறுவனமான ஸ்டார்லிங்க், இந்தியாவில் அடுத்த இரண்டு மாதங்களுக்குள் தனது சேவைகளைத் தொடங்கவுள்ளது.

கடந்த வாரம் தொலைத்தொடர்புத் துறையிடம் (DoT) உரிமம் பெற்றதைத் தொடர்ந்து இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

ஸ்டார்லிங்க் செயற்கைக்கோள் கருவி ரூ.33,000 விலையிலும், மாதாந்திர அன்லிமிடெட் டேட்டா திட்டம் ரூ.3,000 ஆகவும் இருக்கும்.

முதற்கட்டமாக ஒரு மாத இலவச சோதனைக் காலம் வழங்கப்படும். தொலைதூரப் பகுதிகளுக்கு அதிவேக இணைய இணைப்பு வழங்குவதே ஸ்டார்லிங்கின் முக்கிய நோக்கம்.

இந்த சேவை, இந்தியாவின் டிஜிட்டல் இணைப்பில் ஒரு முக்கிய படியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Tags:    

Similar News