அறிந்து கொள்ளுங்கள்

ரெட்மி 5ஜி ஸ்மார்ட்போனிற்கு திடீர் விலை குறைப்பு அறிவிப்பு!

Published On 2022-12-26 14:33 IST   |   Update On 2022-12-26 14:33:00 IST
  • சியோமி நிறுவனத்தின் 5ஜி ஸ்மார்ட்போன் மாடல்களின் விலை மிக குறைவாக நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.
  • ரெட்மி 11 சீரிஸ் 5ஜி ஸ்மார்ட்போனிற்கு இந்தியாவில் திடீர் விலை குறைப்பு அறிவிக்கப்பட்டு இருக்கிறது.

இந்திய சந்தையில் ரெட்மி 11 பிரைம் 5ஜி ஸ்மார்ட்போனிற்கு திடீர் விலை குறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. சியோமி நிறுவனத்தின் துணை பிராண்டு ரெட்மி தனது ரெட்மி 11 பிரைம் 5ஜி ஸ்மார்ட்போனினை இரண்டு வேரியண்ட்களில் அறிமுகம் செய்தது. தற்போதைய விலை குறைப்பு ஸ்மார்ட்போனின் இரண்டு வேரியண்ட்களுக்கும் பொருந்தும். குறைக்கப்பட்ட விலை சியோமி இந்தியா மற்றும் அமேசான் இந்தியா வலைதளங்களில் ஏற்கனவே அமலுக்கு வந்துவிட்டது.

ரெட்மி 11 பிரைம் 5ஜி ஸ்மார்ட்போனின் விலை ரூ. 1000 குறைக்கப்பட்டு இருக்கிறது. இந்த ஆண்டு செப்டம்பர் மாத வாக்கில் அறிமுகம் செய்யப்பட்ட நிலையில், ரெட்மி நோட் 11 பிரைம் 5ஜி ஸ்மார்ட்போன் 4 ஜிபி ரேம், 64 ஜிபி மெமரி மற்றும் 6 ஜிபி ரேம், 128 ஜிபி என இருவித ஆப்ஷன்களில் கிடைக்கிறது. இந்தியாவில் ரெட்மி 11 பிரைம் 5ஜி ஸ்மார்ட்போனின் பேஸ் வேரியண்ட் விலை ரூ. 13 ஆயிரத்து 999 என நிர்ணயம் செய்யப்பட்டு இருந்தது.

இதன் 6 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி மாடல் விலை ரூ. 15 ஆயிரத்து 999 ஆகும். தற்போது இரண்டு வேரியண்ட்களின் விலைகளிலும் ரூ. 1000 குறைக்கப்பட்டு இருக்கிறது. விலை குறைப்பை தொடர்ந்து ரெட்மி 11 பிரைம் 5ஜி ஸ்மார்ட்போனின் விலை முறையே ரூ. 12 ஆயிரத்து 999 மற்றும் ரூ. 14 ஆயிரத்து 999 என மாறி இருக்கிறது. விலை குறைப்பின் படி ரெட்மி 11 பிரைம் 5ஜி ஸ்மார்ட்போனின் விலை தற்போது ரூ. 15 ஆயிரத்திற்கும் கீழ் மாறி இருக்கிறது.

ரெட்மி 11 பிரைம் 5ஜி அம்சங்கள்:

6.58 இன்ச் FHD+ 2408x1080 பிக்சல் டிஸ்ப்ளே, 90Hz ரிப்ரெஷ் ரேட்

கார்னிங் கொரில்லா கிளாஸ் 3

மீடியாடெக் டிமென்சிட்டி 700 பிராசஸர்

6 ஜிபி ரேம்

128 ஜிபி மெமரி

மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி

ஆண்ட்ராய்டு 12 சார்ந்த MIUI 13

50MP பிரைமரி கேமரா

2MP டெப்த் சென்சார்

8MP செல்ஃபி கேமரா

5000 எம்ஏஹெச் பேட்டரி

18 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி

Tags:    

Similar News