அறிந்து கொள்ளுங்கள்

240 வாட் சார்ஜிங்குடன் அறிமுகமாகும் ரியல்மி ஸ்மார்ட்போன்

Published On 2023-01-28 10:59 GMT   |   Update On 2023-01-28 10:59 GMT
  • 240 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி கொண்ட புது ஸ்மார்ட்போனை ரியல்மி அறிமுகம் செய்ய இருக்கிறது.
  • கடந்த மாதம் தான் ரியல்மி தனது 240 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் தொழில்நுட்பத்தை அறிவித்தது.

ரியல்மி நிறுவனம் GT நியோ 5 ஸ்மார்ட்போனின் வெளியீட்டை உறுதிப்படுத்தி விட்டது. புது ஸ்மார்ட்போனின் வெளியீட்டை உணர்த்தும் டீசரை ரியல்மி சீன வலைதளமான வெய்போவில் வெளியிட்டு இருக்கிறது. புது ஸ்மார்ட்போனின் சரியான வெளியீட்டு தேதி இதுவரை குறிப்பிடப்படவில்லை.

எனினும், ரியல்மி GT நியோ 5 ஸ்மார்ட்போன் 240 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியுடன் அறிமுகமாகும் உலகின் முதல் ஸ்மார்ட்போன் எனும் பெருமையை பெறும் என ரியலமி உறுதிப்படுத்தி இருக்கிறது. அதிவேக ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியுடன் அடுத்த மாதம் அறிமுகமாகும் என்பதை தவிர புது ஸ்மார்ட்போன் பற்றி வேறு எந்த தகவலும் டீசரில் இடம்பெறவில்லை.

முன்னதாக இந்த ஸ்மார்ட்போன் விவரங்கள் பல்வேறு சான்றளிக்கும் வலைதளங்களில் வெளியாகி இருக்கிறது. இது ரியல்மி நிறுவனம் கடந்த ஆண்டு அறிமுகம் செய்த GT நியோ 3 ஸ்மார்ட்போனின் மேம்பட்ட வெர்ஷன் ஆகும். சீனாவில் "4" ஆம் எண் ராசியில்லாத ஒன்றாக பார்க்கப்படுவதால், ரியல்மி நிறுவனம் GT நியோ 4 பெயருக்கு மாற்றாக ரியல்மி GT நியோ 5 பெயரில் அடுத்த ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்ய முடிவு செய்துள்ளது.

டிப்ஸ்டர் அபிஷேக் யாதவ் வெளியிட்டு இருக்கும் தகவல்களில் இந்த ஸ்மார்ட்போன் பிப்ரவரி 8 ஆம் தேதி அறிமுகமாகும் என தெரிவித்து இருக்கிறார். அம்சங்களை பொருத்தவரை ரியல்மி GT நியோ 5 மாடலில் 6.7 இன்ச் OLED டிஸ்ப்ளே, 1.5K ரெசல்யூஷன், 144Hz ரிப்ரெஷ் ரேட், இண்டகிரேட் செய்யப்பட்ட கைரேகை சென்சார், அதிகபட்சம் 16 ஜிபி LPDDR5 ரேம், அதிகபட்சம் 256 UFS 3.1 மெமரி வழங்கப்படுகிறது.

பேட்டரி மற்றும் சார்ஜிங்கை பொருத்தவரை ரியல்மி GT நியோ 5 ஸ்மார்ட்போன் 4600 எம்ஏஹெச் பேட்டரி, 240 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் மற்றும் 5000 எம்ஏஹெச் பேட்டரி, 150 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி என இருவித ஆப்ஷன்களில் விற்பனைக்கு வரும் என கூறப்படுகிறது.

Tags:    

Similar News