அறிந்து கொள்ளுங்கள்

இனி அந்த அம்சம் ப்ரோ மாடல்களில் மட்டும் வழங்கப்படும் - ஒன்பிளஸ் அதிரடி

Published On 2022-06-13 11:53 IST   |   Update On 2022-06-13 11:53:00 IST
  • ஒன்பிளஸ் ஸ்மார்ட்போன்களில் விரைவில் புது மாற்றம் செய்யப்பட இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
  • இந்த மாற்றம் விரைவில் அமலுக்கு வர இருக்கிறது.

ஒன்பிளஸ் ஒன் அறிமுகப்படுத்தப்பட்டதிலிருந்து ஒன்பிளஸ் அதன் ஸ்மார்ட்போன்களில் அலர்ட் ஸ்லைடரை வழங்கத் தொடங்கியது. மொபைலின் மேல் இடது விளிம்பில் அமைந்துள்ள இது, திரையைத் திறக்காமலேயே போனின் ஒலி சுயவிவரத்தை சைலண்ட், வைப்ரேட் மற்றும் ரிங் என அமைக்க பயனரை அனுமதிக்கிறது.

இது குறித்து டிப்ஸ்டர் வெளியிட்டு இருக்கும் தகவல்களின் படி, இந்த நடைமுறை விரைவில் மாறும் என கூறப்படுகிறது. மேலும் அந்நிறுவனம் பிரபலமான அலர்ட் ஸ்லைடரை அதன் முதன்மை மாடல்களுக்கு மட்டும் வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சமீபத்தில் வெளியிடப்பட்ட ஒன்பிளஸ் நார்டு 2T ஆனது அலர்ட் ஸ்லைடரைக் கொண்ட கடைசி ஒன்பிளஸ் மிட் ரேன்ஜ் ஸ்மார்ட்போன் என கூறப்படுகிறது. இதையடுத்து அலர்ட் ஸ்லைடர் ஓப்போ ஃபிளாக்ஷிப் சீரிஸ் ப்ரோ மாடல்களில் மட்டுமே வழங்கப்படும். வர இருக்கும் ஒன்பிளஸ் 10T ஸ்மார்ட்போன் அலர்ட் ஸ்லைடர் இல்லாமல் வெளியிடப்படும் என்று கூறப்படுகிறது.

Tags:    

Similar News