அறிந்து கொள்ளுங்கள்

ஸ்மார்ட்போனிற்கு திடீர் விலை குறைப்பு - சாம்சங் அதிரடி!

Update: 2022-08-01 07:01 GMT
  • சாம்சங் நிறுவனம் தனது ஸ்மார்ட்போன் மாடலுக்கு அவ்வப்போது விலை குறைப்பை அறிவிப்பது வாடிக்கையான விஷயம் தான்.
  • தற்போது கேலக்ஸி F சீரிஸ் ஸ்மார்ட்போனிற்கு திடீர் விலை குறைப்பு அறிவிக்கப்பட்டு இருக்கிறது.

சாம்சங் நிறுவனம் சமீபத்தில் தான் தனது கேலக்ஸி வாட்ச் 4 மாடலின் விலையை குறைத்தது. தற்போது சாம்சங் நிறுவனம் தனது 5ஜி ஸ்மார்ட்போன் விலையை குறைத்து இருக்கிறது. இந்த ஆண்டு மார்ச் மாத வாக்கில் அறிமுகம் செய்யப்பட்ட சாம்சங் கேலக்ஸி F23 5ஜி மாடலின் விலை இந்தியாவில் தற்போது குறைக்கப்பட்டு உள்ளது.

இந்திய சந்தையில் இரண்டு வேரியண்ட்களில் விற்பனை செய்யப்படும் சாம்சங் கேலக்ஸி F23 5ஜி மாடல் தற்போது ரூ. 1,500 வரை குறைந்த விலையில் கிடைக்கிறது. முன்னதாக கேலக்ஸி F23 5ஜி ஸ்மார்ட்போனின் 4ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி மாடல் ரூ. 17 ஆயிரத்து 499 விலையிலும், 6ஜிபி ரேம், 128ஜிபி மெமரி மாடல் ரூ. 18 ஆயிரத்து 499 விலையிலும் விற்பனை செய்யப்பட்டு வந்தது.


தற்போது இரு வேரியண்ட்களும் முறையே ரூ. 15 ஆயிரத்து 999 மற்றும் ரூ. 16 ஆயிரத்து 999 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. சாம்சங் கேலக்ஸி F23 5ஜி ஸ்மார்ட்போன் ஃபாரஸ்ட் கிரீன், அக்வா புளூ மற்றும் கூப்பர் பிளஷ் நிறங்களில் கிடைக்கிறது. விலை குறைப்பு மட்டும் இன்றி தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தும் போது ரூ. 1000 உடனடி தள்ளுபடியும் வழங்கப்படுகிறது.

சாம்சங் கேலக்ஸி F23 5ஜி அம்சங்கள்:

- 6.6 இன்ச் FHD+TFT, 120Hz டிஸ்ப்ளே

- ஆக்டா கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 750ஜி பிராசஸர்

- 4ஜிபி, 6ஜிபி ரேம்

- 128ஜிபி மெமரி

- மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி

- ஆண்ட்ராய்டு 12

- 50MP பிரைமரி கேமரா

- 8MP அல்ட்ரா வைடு கேமரா

- 2MP மேக்ரோ கேமரா

- 8MP செல்ஃபி கேமரா

- 5000mAh பேட்டரி

- 25 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங்

- டூயல் சிம் ஸ்லாட்

- 3.5 எம்எம் ஆடியோ போர்ட்

- பக்கவாட்டில் கைரேகை சென்சார்

புதிய விலை விவரங்கள்:

சாம்சங் கேலக்ஸி F23 5ஜி 4ஜிபி ரேம், 128ஜிபி மெமரி ரூ. 15 ஆயிரத்து 999

சாம்சங் கேலக்ஸி F23 5ஜி 6ஜிபி ரேம், 128ஜிபி மெமரி ரூ. 16 ஆயிரத்து 999

Tags:    

Similar News