அறிந்து கொள்ளுங்கள்

M2 அல்ட்ரா சிப்செட் கொண்ட புதிய மேக் ப்ரோ அறிமுகம்

Published On 2023-06-05 20:39 GMT   |   Update On 2023-06-05 20:39 GMT
  • புதிய மேக் ப்ரோ மாடல் 192 ஜிபி மெமரி மற்றும் 800 ஜிபி வரையிலான யுனிஃபைடு மெமரியுடன் கிடைக்கிறது.
  • இந்திய சந்தையில் புதிய மேக் ப்ரோ மாடலின் விற்பனை அடுத்த வாரம் துவங்க இருக்கிறது.

ஆப்பிள் நிறுவனம் WWDC 2023 நிகழ்வில் தனது மேக் ப்ரோ மாடலை முற்றிலும் புதிய M2 அல்ட்ரா சிப்செட் உடன் அப்டேட் செய்து இருக்கிறது. இந்த மேக் ப்ரோ மாடல் அதன் முந்தைய வெர்ஷனை விட மூன்று மடங்கு அதிவேகமானது ஆகும். M2 அல்ட்ரா கொண்ட மேக் ப்ரோ மாடலில் 24-கோர் சிபியு மற்றும் 76-கோர் ஜிபியு, இருமடங்கு ரேம் மற்றும் எஸ்எஸ்டி ஸ்டோரேஜ் வழங்கப்பட்டு இருக்கிறது.

புதிய மேக் ப்ரோ மாடல் 192 ஜிபி மெமரி மற்றும் 800 ஜிபி வரையிலான யுனிஃபைடு மெமரி பேண்ட்வித் ஆப்ஷனில் வாங்கிட முடியும். இத்துடன் அதிகபட்சம் ஏழு ஆஃப்டர்பர்னர் கார்டுகள் புதிய மேக் ப்ரோவில் வழங்கப்பட்டு உள்ளன. இது 8K ப்ரோ ரெஸ் தரம் கொண்ட 22 வீடியோக்களை ஸ்டிரீம் செய்யும். இதில் நான்கு தண்டர்போல்ட் 4 போர்ட்கள் உள்ளன.

இந்த மேக் ப்ரோ மாடல் ஆறு ப்ரோ டிஸ்ப்ளே XDR-க்களை சப்போர்ட் செய்கிறது. இத்துடன் வைபை 6E மற்றும் ப்ளூடூத் 5.3 வழங்கப்பட்டு இருக்கிறது. யுஎஸ்பி ஏ போர்ட்கள், இரண்டு அதிக பேண்ட்வித் கொண்ட HDMI போர்ட்கள், இரண்டு 10GB ஈத்தர்நெட் போர்ட்கள், ஹெட்போன் ஜாக் உள்ளிட்டவை வழங்கப்பட்டு உள்ளன.

இந்திய சந்தையில் புதிய மேக் ப்ரோ (டவர் என்க்லோஷர்) மாடல் விலை ரூ. 7 லட்சத்து 29 ஆயிரத்து 900 என்றும் மேக் ப்ரோ (ரேக் என்க்லோஷர்) மாடல் விலை ரூ. 7 லட்சத்து 79 ஆயிரத்து 900 என்றும் நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இதற்கான முன்பதிவு ஏற்கனவே துவங்கி நடைபெற்று வரும் நிலையில், விற்பனை ஜூன் 13 ஆம் தேதி துவங்குகிறது.

Tags:    

Similar News