அறிந்து கொள்ளுங்கள்

கோப்புப்படம் 

இந்தியாவில் வெளியாகும் ஆப்பிள் கிரெடிட் கார்டு - எதற்கு தெரியுமா?

Published On 2023-06-24 10:06 IST   |   Update On 2023-06-24 10:06:00 IST
  • இந்திய சந்தையில் ஆப்பிள் கிரெடிட் கார்டு சேவையை வழங்க அந்நிறுவனம் பேச்சுவார்த்தை நடத்துவதாக தகவல்.
  • ஆப்பிள் நிறுவனம் தேசிய பேமன்ட்ஸ் கார்ப்பரேஷன் உடன் இணைந்து ஆப்பிள் பே சேவையை அறிமுகம் செய்யலாம்.

ஆப்பிள் நிறுவனம் தனது கிரெடிட் கார்டை இந்தியாவில் அறிமுகம் செய்வதற்கான பணிகளில் ஈடுபட்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்தியாவில் இது ஆப்பிள் கார்டு பெயரில் அறிமுகம் செய்யப்படும் என்று கூறப்படுகிறது. ஏற்கனவே அமெரிக்காவில் ஆப்பிள் கிரெடிட் கார்டு சேவை, அந்நாட்டு சர்வதேச முதலீட்டு வங்கி மற்றும் நிதி சேவைகள் நிறுவனமான கோல்டுமேன் சாக்ஸ் உடன் இணைந்து வெளியிடப்பட்டு இருக்கிறது.

 

கோப்புப்படம் 

இந்திய சந்தையில் ஆப்பிள் கிரெடிட் கார்டு சேவையை வழங்குவதற்காக இந்திய வங்கிகள் மற்றும் அமலாக்கத்துறை அதிகாரிகளிடம் ஆப்பிள் நிறுவனம் பேச்சுவார்த்தையை துவங்கி இருப்பதாக கூறப்படுகிறது. கடந்த ஏப்ரல் மாதம் இந்தியா வந்திருந்த ஆப்பிள் தலைமை செயல் அதிகாரி டிம் குக், ஹெச்டிஎப்சி வங்கி தலைமை செயல் அதிகாரி மற்றும் நிர்வாக இயக்குனர் ஜகதீசனை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியதாக கூறப்படுகிறது.

 

கோப்புப்படம் 

ஆப்பிள் நிறுவனம் தேசிய பேமன்ட்ஸ் கார்ப்பரேஷன் உடன் இணைந்து ஆப்பிள் பே சேவையை அறிமுகம் செய்வதற்கான பணிகளில் ஈடுபட்டு வருவதாக கூறப்படுகிறது. எனினும், இந்த பேச்சுவார்த்தைகள் கிரெடிட் கார்டு தொடர்பானதா அல்லது தேசிய பேமன்ட் கார்ப்பரேஷன் வழங்கி வரும் யுபிஐ சார்ந்த பேமன்ட் வழங்குவதற்காகவா என்பது கேள்விக்குறியாகவே உள்ளது.

இந்தியாவில் வங்கிகள் மட்டுமே கிரெடிட் கார்டுகளை வெளியிட அனுமதி அளிக்கப்பட்டு வருகிறது. ஸ்மார்ட்போன்களில் பேமன்ட் செய்வதற்காக ஏராளமான வசதிகள் கிடைக்கின்றன. ஆப்பிள் மட்டுமின்றி கூகுள், அமேசான் மற்றும் சாம்சங் நிறுவனங்களும் பேமன்ட் பிரிவில் தங்களது சேவைகளை வழங்குவதற்கான பணிகளில் ஈடுபட்டு வருகின்றன.

Tags:    

Similar News