அறிந்து கொள்ளுங்கள்
null

10 ஆண்டுகளுக்குப் பிறகு.. லோகோவை மாற்றிய கூகுள் - காரணம் என்ன?

Published On 2025-05-13 22:59 IST   |   Update On 2025-05-13 22:59:00 IST
  • கூகுள் ஆப் பீட்டா பதிப்பு 16.18 உடன் ஆண்ட்ராய்டு சாதனங்களிலும் தோன்றுகிறது.
  • கடைசியாக 2015 ஆம் ஆண்டு கூகுள் தனது 'G' லோகோவில் மாற்றம் செய்த

முன்னணி தேடுபொறி நிறுவனமான கூகுள், சுமார் பத்து ஆண்டுகளுக்குப் பிறகு அதன் 'G' லோகோவில் மாற்றங்களைச் செய்துள்ளது.

பழைய லோகோவில் பெட்டிகளாக தென்படும், சிவப்பு, மஞ்சள், பச்சை மற்றும் நீலம் ஆகிய நான்கு திட நிறங்கள், தற்போது சாய்வான கலவையாகவும் திடத்தன்மை குறைக்கப்பட்டும் புதிய லோகோவில் காணப்படுகின்றன. 

கூகுள் தொடர்ந்து புதிய AI அம்சங்களை அறிமுகப்படுத்தி வருவதால் இந்த வடிவமைப்பு உருவாக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

9to5Google இன் அறிக்கையின்படி, இந்த புதுப்பிப்பு தற்போது iOS மற்றும் பிக்சல் சாதனங்களில் காணப்படுகிறது. இது கூகுள் ஆப் பீட்டா பதிப்பு 16.18 உடன் ஆண்ட்ராய்டு சாதனங்களிலும் தோன்றுகிறது.

இருப்பினும், கூகுளின் முக்கிய சொல் அடையாளத்தில் நிறுவனம் இன்னும் எந்த மாற்றங்களையும் செய்யவில்லை.

கூகிள் தனது தயாரிப்புகளில் AI க்கு முன்னுரிமை அளிப்பதால், எதிர்காலத்தில் மேலும் பல மாற்றங்கள் வரலாம் என்று கூறப்படுகிறது. கடைசியாக 2015 ஆம் ஆண்டு கூகுள் தனது 'G' லோகோவில் மாற்றம் செய்தது குறிப்பிடத்தக்கது .

Tags:    

Similar News