நியோ 10 சீரிஸை அப்டேட் செய்யும் ஐகூ.. அடுத்த வாரம் வெளியீடு- என்ன ஸ்பெஷல்?
- 120W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி மற்றும் 7,000mAh பேட்டரியை கொண்டிருக்கலாம்.
- இந்த ஸ்மார்ட்போன் LPDDR5x Ultra RAM மற்றும் UFS 4.1 ஸ்டோரேஜ் கொண்டிருக்கும் என்று கூறப்பட்டுள்ளது.
ஸ்மார்ட்போன் சந்தையில் அதிகம் எதிர்பார்க்கப்படும் ஐகூ நிறுவன ஸ்மார்ட்போன் மற்றும் இதர சாதனங்கள் வருகிற 20-ந்தேதி சீனாவில் அறிமுகம் செய்யப்பட உள்ளன. இதற்கான நிகழ்வில் ஐகூ நியோ 10 ப்ரோ பிளஸ், ஐகூ பேட் 5 சீரீஸ், ஐகூ வாட்ச் 5, ஐகூ ட்ரூ வயர்லெஸ் இயர்பட்ஸ் 3 அறிமுகப்படுத்தப்படுகிறது.
இது கடந்த ஆண்டு நவம்பர் மாதம் வெளியிடப்பட்ட ஐகூ நியோ 10 மற்றும் நியோ 10 ப்ரோ சீரிசில் இணையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வரவிருக்கும் நியோ 10 ப்ரோ பிளஸ் ஸ்மார்ட்போனில் ஸ்னாப்டிராகன் 8 எலைட் பிராசஸர் மற்றும் 2K டிஸ்ப்ளே வழங்கப்படுகிறது.
ஐகூ நியோ 10 ப்ரோ பிளஸ் ஸ்மார்ட்போனில் ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 8 எலைட் பிராசஸர் வழங்கப்படும் என்று ஐகூ நிறுவனம் ஏற்கனவே தெரிவித்து இருந்தது. இந்த சிப்செட் ஐகூ பிராண்டின் புளூ க்ரிஸ்டல் தொழில்நுட்பத்துடன் மேம்படுத்தப்படும். இந்த ஸ்மார்ட்போன் LPDDR5x Ultra RAM மற்றும் UFS 4.1 ஸ்டோரேஜ் கொண்டிருக்கும் என்று கூறப்பட்டுள்ளது.
மேலும், ஐகூ நியோ 10 ப்ரோ பிளஸ் ஸ்மார்ட்போனில் ஏற்படும் வெப்பத்தை கையாள்வதற்காக 7K ஐஸ் வால்ட் கொண்டிருக்கும் என்றும், இது குளிரூட்டும் திறனை 15 சதவீதம் மேம்படுத்துவதாக தெரியவந்துள்ளது.
வரவிருக்கும் நியோ 10 ப்ரோ+ 1.5மிமீ பெசல்கள் மற்றும் ஒரு கண்ணாடி பின்புற பேனலுடன் 2K டிஸ்ப்ளேவை கொண்டிருக்கும் என்று ஐகூ தெரிவித்துள்ளது. இது ஷி குவாங் ஒயிட், ஷேடோ பிளாக் மற்றும் சூப்பர் பிக்சல் (சீன மொழியில் இருந்து மொழிபெயர்க்கப்பட்டது) போன்ற நிறங்களில் கிடைக்கும்.
ஐகூ நியோ 10 ப்ரோ பிளஸ் ஸ்மார்ட்போன் 6.82-இன்ச் பிளாட் OLED திரையுடன் வரும் ஏற்கனவே வெளியான தகவல்களில் கூறப்பட்டுள்ளது. பின்புறம் இரட்டை 50MP கேமராக்கள் இருக்கும் என்று கூறப்படுகிறது. இது 120W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி மற்றும் 7,000mAh பேட்டரியை கொண்டிருக்கலாம். இந்த ஸ்மார்ட்போனில் 16 ஜிபி ரேம் வழங்கப்படலாம் என்றும் ஆண்ட்ராய்டு 15 சார்ந்த ஒரிஜின் ஓஎஸ் 5 உடன் வரலாம்.