மொபைல்ஸ்

கோப்புப் படம்

null

லீக் ஆன புது தகவல்.. வேற லெவல் லுக்கில் தயாராகும் ஐபோன் SE 4

Published On 2023-11-11 07:09 GMT   |   Update On 2023-11-11 07:09 GMT
  • இந்த மாடலில் மேம்பட்ட லுக், பெரிய ஸ்கிரீன் வழங்கப்படலாம்.
  • ஐபோன் SE 4 எடை 6 கிராம்கள் வரை குறைவாக இருக்கும்.

ஆப்பிள் நிறுவனம் 2020 ஆண்டில் தனது ஐபோன் SE சீரிசை அறிமுகம் செய்தது. பிறகு இதன் மேம்பட்ட வெர்ஷனாக ஐபோன் SE 3 கடந்த ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது. ஆனால், இந்த ஆண்டு ஐபோன் SE மாடல் எதுவும் அறிமுகம் செய்யப்படவில்லை. எனினும், புதிய ஐபோன் SE மாடல் பற்றிய தகவல்கள் தொடர்ந்து வெளியாகி வருகின்றன.

அந்த வகையில், தற்போது வெளியாகி இருக்கும் தகவல்களில் ஐபோன் SE 4 டிசைன் ஐபோன் 14-ஐ தழுவி உருவாக்கப்பட்டு இருக்கும் என்று கூறப்படுகிறது. மேலும், புதிய ஐபோன் SE 4 அனைவரும் எதிர்பார்த்து காத்திருந்த மாடலாக அமையும் என்றும் தகவல் வெளியாகி உள்ளது. ஐபோன் 14 சார்ந்த டிசைன் கொண்டிருக்கும் பட்சத்தில் இந்த மாடலில் மேம்பட்ட லுக், பெரிய ஸ்கிரீன் வழங்கப்படலாம்.

கோப்புப் படம் 

அதன்படி ஐபோன் SE 4 மாடலில் ஃபிளாட் எட்ஜ் இன்றி, ஐபோன் 14-ஐ விட அளவில் சற்றே குறைந்திருக்கும் என்று தெரிகிறது. இத்துடன் டச் ஐ.டி. பட்டன் ஒன்றும் ஐபோன் SE 4 மாடலில் வழங்கப்படும் என்று கூறப்படுகிறது. இதுதவிர யு.எஸ்.பி. சி போர்ட் மற்றும் ஆக்ஷன் பட்டன் வழங்கப்படுகிறது. இவை இரண்டும் ஐபோன் 15 ப்ரோ மாடல்களில் அறிமுகம் செய்யப்பட்டவை ஆகும்.

ஐபோன் 14-ஐ விட ஐபோன் SE 4 எடை 6 கிராம்கள் வரை குறைவாக இருக்கும் என்று தெரிகிறது. ஐபோன் SE 4 எடை 172 கிராம்களாக இருக்கும் என்று கூறப்படுகிறது. ஐபோன் SE 4 மாடலில் ஒற்றை கேமரா செட்டப் வழங்கப்படுவதே இதற்கு காரணம் என்று தெரிகிறது. ஐபோன் 14 மாடலில் டூயல் கேமரா சென்சார்கள் வழங்கப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News