மொபைல்ஸ்
null

அதிரடி தள்ளுபடியுடன் விற்பனை செய்யப்படும் ஐபோன் 12

Update: 2022-11-22 04:10 GMT
  • ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் மாடல்களுக்கு அவ்வப்போது அசத்தல் சலுகைகள் அறிவிக்கப்படுவது வாடிக்கையான விஷயம் தான்.
  • முன்னணி ஆன்லைன் வலைதளங்கள் துவங்கி, மூன்றாம் தரப்பு விற்பனையாளர்கள் பலரும் ஐபோன்களுக்கு திடீர் சலுகை அறிவிப்பர்.

இந்திய சந்தையில் ஐபோன் 12 மாடலுக்கு அசத்தல் சலுகை அறிவிக்கப்பட்டு இருக்கிறது. முன்னணி ஆன்லைன் விற்பனையாளரான ப்ளிப்கார்ட் ஐபோன் 12 ஸ்மார்ட்போனிற்கு ரூ. 7 ஆயிரத்து 130 அதிரடி தள்ளுபடி வழங்குகிறது. முன்னதாக ஐபோன் 12 மாடல் பேஸ் வேரியண்ட் விலை ரூ. 79 ஆயிரத்து 900 என நிர்ணயம் செய்யப்பட்டு இருந்தது. தற்போது ஐபோன் 12 மாடலுக்கு தள்ளுபடி மட்டுமின்றி எக்சேன்ஜ் மற்றும் வங்கி சலுகைகளும் வழங்கப்படுகிறது.

ப்ளிப்கார்ட் தளத்தில் ஐபோன் 12 (64 ஜிபி) விலை தற்போது ரூ. 48 ஆயிரத்து 999 என குறிப்பிடப்பட்டு இருக்கிறது. முன்னதாக நவம்பர் 15 ஆம் தேதி ஐபோன் 12 விலை ரூ. 56 ஆயிரத்து 129 என நிர்ணயம் செய்யப்பட்டு இருந்ததாக கூறப்படுகிறது. இந்திய சந்தையில் 2020 அக்டோபர் மாத வாக்கில் ஐபோன் 12 மாடல் ரூ. 79 ஆயிரத்து 990 விலையில் அறிமுகம் செய்யப்பட்டது.

தற்போது இதன் விலை ரூ. 48 ஆயிரத்து 999 என குறைக்கப்பட்டு இருக்கிறது. தள்ளுபடி மட்டுமின்றி ஐபோன் 12 வாங்குவோர் பழைய ஸ்மார்ட்போன்களை எக்சேன்ஜ் செய்து அதிகபட்சம் ரூ. 17 ஆயிரத்து 500 வரை தள்ளுபடி பெறலாம். எக்சேன்ஜ் மதிப்பு ஒவ்வொரு ஸ்மார்ட்போன் மாடல் மற்றும் அது எந்த அளவுக்கு சீராக இயங்குகிறது என்பதை பொருத்து வேறுபடும்.

இவை தவிர தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளுக்கு 10 சதவீதம் தள்ளுபடி வழங்கப்படுகிறது. 64 ஜிபி மட்டுமின்றி ஐபோன் 12 128 ஜிபி, 256 ஜிபி மாடல்களுக்கும் தள்ளுபடி வழங்கப்படுகிறது. இரு மாடல்களின் விலை முறையே ரூ. 53 ஆயிரத்து 999 மற்றும் ரூ. 61 ஆயிரத்து 999 என மாற்றப்பட்டு இருக்கிறது.

ஐபோன் 12 அம்சங்கள்:

அம்சங்களை பொருத்தவரை ஐபோன் 12 மாடலில் 6.1 இன்ச் OLED பேனல், சூப்பர் ரெட்டினா XDR டிஸ்ப்ளே, செராமிக் ஷீல்டு கிளாஸ், ஏ14 பயோனிக் பிராசஸர், டூயல் 12MP கேமரா சென்சார்கள், 12MP செல்ஃபி கேமரா, IP68 தர வாட்டர் மற்றும் டஸ்ட் ரெசிஸ்டண்ட் வசதி கொண்டிருக்கிறது. ஐபோன் 12 மாடலுடன் யுஎஸ்பி சை டு லைட்னிங் கேபிள் வழங்கப்படுகிறது.

Tags:    

Similar News