கணினி

10000 எம்ஏஹெச் பேட்டரியுடன் புது சியோமி டேப் அறிமுகம்

Update: 2022-08-12 05:52 GMT
  • சியோமி நிறுவனம் தனது பெரிய டேப்லெட் மாடலை விற்பனைக்கு அறிமுகம் செய்து இருக்கிறது.
  • இந்த டேப்லெட் முற்றிலும் மெட்டல் பாடி மற்றும் வளைந்த ஓரங்களை கொண்டிருக்கிறது.

சியோமி நிறுவனத்தின் புதிய சியோமி பேட் 5 ப்ரோ சீன சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது. மிக்ஸ் போல்டு 2, ரெட்மி K50 எக்ஸ்டிரீம் எடிஷன், வாட்ச் S1 ப்ரோ மற்றும் பட்ஸ் 4 ப்ரோ போன்ற சாதனங்களுடன் புதிய பேட் 5 ப்ரோ மாடலும் அறிமுகமாகி இருக்கிறது. புதிய பேட் 5 ப்ரோ சியோமி இதுவரை வெளியிட்டதில் அளவில் பெரிய மாடல் ஆகும்.

சியோமி பேட் 5 ப்ரோ மாடலில் TÜV ரெயின்லாந்து சான்று பெற்ற 12.4 இன்ச், 2.5K ஹெச்டி டிஸ்ப்ளே, 120Hz ரிப்ரெஷ் ரேட் கொண்டிருக்கிறது. இத்துடன் வளைந்த ஓரங்கள் மற்றும் நான்கு புறமும் மெட்டல் பாடி கொண்டிருக்கிறது. இந்த டேப்லெட்டில் குவால்காம் ஸ்னாப்டிராகன் 870 பிராசஸர், அதிகபட்சம் 12 ஜிபி வரையிலான ரேம், 512 ஜிபி மெமரி வழங்கப்பட்டு இருக்கிறது.


சியோமி பேட் 5 ப்ரோ அம்சங்கள்:

- 12.4 இன்ச் 2.5K 120Hz டிஸ்ப்ளே, அதிகபட்சம் 500நிட்ஸ் பிரைட்னஸ்

- 50MP பிரைமரி கேமரா, 1/2.76″, 1.28μm, f/1.8, PDAF

- 2MP டெப்த் கேமரா

- 20MP செல்பி கேமரா, 1.6μm

- குவால்காம் ஸ்னாப்டிராகன் 870 பிராசஸர்

- 6/8/12 ஜிபி ரேம்

- 128 ஜிபி /256 ஜிபி /512 ஜிபி (UFS 3.1) மெமரி

- வைபை 6,5,4, ப்ளூடூத் 5.2 - AAC/LDAC /LHDC2.0/3.0

- ஹைரெஸ் டால்பி அட்மோஸ் வசதி

- ஆண்ட்ராய்டு- 12 சார்ந்த எம்ஐயுஐ பேட் 13

- 10000 எம்ஏஹெச் ரேட்டரி

- 64 வாட் பாஸ்ட் டார்ங்[ிங்

விலை விவரங்கள்:

சியோமி டேல்லெட் மாடல் பிளாக், சில்வர் மற்றும் மொரியமா நிறங்களில் கிடைக்கிறது. இதன் விலை 444 டாலர்கள் இந்திய மதிப்பில் ரூ. 35 ஆயிரத்து 380 துவங்குகிறது.டாப் எண்ட் மாடல் விலை 49 ஆயிரத்து 535 ஆகும்.  

Tags:    

Similar News