கணினி

உங்களுக்கு நீங்களே மெசேஜ் அனுப்பிக்கலாம் - புது வசதி அறிமுகம் செய்த வாட்ஸ்அப்!

Update: 2022-11-29 05:18 GMT
  • வாட்ஸ்அப் செயலியில் ஏற்கனவே சோதனை செய்யப்பட்டு வந்த சூப்பர் அம்சம் தற்போது ஸ்டேபில் வெர்ஷனில் வழங்கப்படுகிறது.
  • புது அம்சம் கொணஅடு பயனர்கள் தங்களுக்கு முக்கியமான தகவல்களை வாட்ஸ்அப் செயலியிலேயே குறித்து வைத்துக் கொள்ளலாம்.

வாட்ஸ்அப் பீட்டா வெர்ஷனில் கடந்த மாதம் சோதனை செய்யப்பட்டு வந்த மெசேஜ் யுவர்செல்ஃப் (Message Yourself) அம்சம் தற்போது வெளியாகிறது. புதிய 1:1 அம்சம் கொண்டு உங்களுக்கு நீங்களே மெசேஜ் அனுப்பிக் கொள்ள முடியும். இந்த அம்சம் மூலம் குறிப்புகளை உங்களுக்கே அனுப்பிக் கொள்வதோடு, நினைவூட்டிகள் மற்றும் மிக முக்கிய தகவல்களையும் அனுப்பிக் கொள்ளலாம்.

இந்த அம்சம் கொண்டு பயனர்கள் தாங்கள் செய்ய வேண்டிய பணி சார்ந்த விவரங்களை குறித்துக் கொள்ள உதவும். இந்த அம்சத்தில் ஷாப்பிங் செய்ய வேண்டிய பொருட்களின் பட்டியல், ரிமைண்டர் உள்ளிட்டவைகளை குறித்து வைத்துக் கொள்ளலாம். முதற்கட்டமாக இந்த அம்சம் பீட்டா வெர்ஷனில் வழங்கப்பட்ட போது, வாட்ஸ்அப் உங்களின் போன் நம்பருக்கு மெசேஜ் அனுப்பிக் கொள்வதை குறிக்கும் வகையில் தனி கேப்ஷனை வழங்கியது.

மேலும் சிலருக்கு தங்களின் சாட் பாக்ஸ்-இல் சொந்த மொபைல் நம்பர் சிறிது காலத்திற்கு தெரிந்தது. மல்டி டிவைஸ் வசதி இருப்பதால் உங்களது மொபைல் நம்பருக்கு மெசேஜ் அனுப்பிக் கொள்ளும் போது, அந்த மெசேஜ் நீங்கள் சின்க் செய்திருக்கும் மற்ற சாதனங்களிலும் காண்பிக்கப்படும்.

புதிய மெசேஜ் யுவர்செல்ஃப் அம்சத்தை இயக்குவது எப்படி?

வாட்ஸ்அப்-ஐ திறக்கவும்

புதிய சாட்-ஐ உருவாக்க வேண்டும்

பட்டியலில் உங்களின் காண்டாக்ட் முதலில் காண்பிக்கப்படும்

நம்பர் மீது க்ளிக் செய்து மெசேஜ் செய்ய துவங்கலாம்

வாட்ஸ்அப் செயலியில் மெசேஜ் யுவர்செல்ஃப் அம்சம் ஆண்ட்ராய்டு மற்றும் ஐபோனில் வழங்கப்பட்டு வருகிறது. வரும் வாரங்களில் இந்த அம்சம் அனைவருக்கும் வழங்கப்பட்டு விடும். இதுதவிர மெசேஜ்களை எடிட் செய்யும் வசதி, வாய்ஸ் ஸ்டேட்டஸ் அப்டேட் என ஏராளமான புது அம்சங்கள் வாட்ஸ்அப்-இல் வழங்கப்பட இருக்கிறது.

Tags:    

Similar News