கணினி

வாட்ஸ்அப்-இல் கால் லின்க்ஸ் அம்சம் அறிமுகம் - எதற்கு தெரியுமா?

Published On 2022-09-27 06:21 GMT   |   Update On 2022-09-27 06:21 GMT
  • வாட்ஸ்அப் செயலியில் பல்வேறு புது அம்சங்கள் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளன.
  • இத்துடன் சில அம்சங்களுக்கான சோதனை துவங்கி நடைபெற்று வருகிறது.

வாட்ஸ்அப் நிறுவனம் தனது செயலியில் கால் லின்க்ஸ் பெயரில் புது அம்சம் வழங்குவதாக அறிவித்து இருக்கிறது. இந்த புது அம்சம் கொண்டு பயனர்கள் புதிதாக அழைப்பை உருவாக்கவோ அல்லது ஏற்கனவே உள்ள அழைப்பில் இணையவும் முடியும். கால் லின்க்ஸ் ஆப்ஷன் வாட்ஸ்அப் செயலியின் கால்ஸ் டேபில் சேர்க்கப்படுகிறது. இதை கொண்டு ஆடியோ அல்லது வீடியோ அழைப்பிற்கான லின்க்-ஐ உருவாக்க முடியும்.

இந்த அம்சம் வரும் வாரங்களில் அனைவருக்கும் வழங்கப்படும் என வாட்ஸ்அப் தெரிவித்து இருக்கிறது. எனினும், இதனை பயன்படுத்த பயனர்கள் வாட்ஸ்அப் செயலியின் புது வெர்ஷனை இன்ஸ்டால் செய்திருக்க வேண்டும். இது மட்டுமின்றி வாட்ஸ்அப் செயலியின் க்ரூப் வீடியோ கால் அம்சத்தில் அதிகபட்சம் 32 பேருடன் பேசும் வசதி விரைவில் வழங்கப்பட இருக்கிறது. இதற்கான சோதனையும் துவங்கி இருக்கிறது.

கால் லின்க்ஸ்-ஐ உருவாக்கி அதனை பல்வேறு தளங்களில் உள்ள நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு அனுப்பி எளிதில் வாட்ஸ்அப் கால் மேற்கொள்ளலாம். கால் லின்க்ஸ்-ஐ ஒரு முறை க்ளிக் செய்தால் நேரடியாக அழைப்பில் இணைய முடியும். இந்த அம்சம் கூகுள் மீட் அல்லது மைக்ரோசாப்ட் டீம்ஸ் தளங்களில் செயல்படுவதை போன்றே இயங்குகிறது. இந்த அம்சம் எந்தெந்த தளங்களில் இயங்கும் என்பது குறித்து வாட்ஸ்அப் எந்த தகவலையும் வழங்கவில்லை.

வாட்ஸ்அப் க்ரூப் வாய்ஸ் கால் அம்சத்தில் ஏற்கனவே 32 பேருடன் பேசும் வசதி வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த அம்சம் ஆண்ட்ராய்டு மற்றும் ஐஒஎஸ் பயனர்களுக்கு வழங்கப்பட்டு உள்ளது. வாய்ஸ் கால் வரிசையில் தற்போது க்ரூப் வீடியோ கால் சேவையிலும் 32 பேருடன் பேசும் வசதி வழங்கப்பட இருக்கிறது. தற்போது இந்த அம்சம் உருவாக்கப்பட்டு வருகிறது.

Tags:    

Similar News