கணினி

ட்விட்டரில் வழங்கப்படும் வேற லெவல் பாதுகாப்பு அம்சம்?

Published On 2022-11-17 05:13 GMT   |   Update On 2022-11-17 05:13 GMT
  • ட்விட்டர் சமூக வலைதளத்தில் கடந்த சில வாரங்களாக ஏராளமான மாற்றங்கள் தொடர்ந்து அரங்கேறி வருகின்றன.
  • எலான் மஸ்க் ட்விட்டர் தலைமை பொறுப்பை ஏற்றதில் இருந்து பல்லாயிரக்கணக்கானோர் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

எலான் மஸ்க் ட்விட்டர் நிறுவனத்தை விலைக்கு வாங்கியதில் இருந்து அந்நிறுவனம் பற்றிய தகவல்கள் வைரலாகி வருகின்றன. நிறுவனத்தில் பணியாற்றி வந்தவர்களில் பல்லாயிரம் பேர் பணிநீக்கம் செய்யப்பட்டு வருகின்றனர். இதுதவிர ட்விட்டர் புளூ சந்தா, புளூ டிக் விவகாரம் என ஏராளமான புது மாற்றங்கள் ட்விட்டரில் மேற்கொள்ளப்படுகின்றன.

இந்த நிலையில், ட்விட்டர் டைரக்ட் மெசேஜஸ் அம்சத்தில் புதிதாக பாதுகாப்பு அம்சம் சேர்க்கப்பட இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. ட்விட்டர் டைரக்ட் மெசேஜஸ்-இல் எண்ட்-டு-எண்ட் என்க்ரிப்ஷன் வசதி விரைவில் வழங்கப்பட இருப்பதாக கூறப்படுகிறது. இதுபற்றிய தகவல் வெளியானதில் இருந்தே, புதிய பாதுகாப்பு அம்சம் ட்விட்டர் தளத்தை வாட்ஸ்அப் மற்றும் இன்ஸ்டாகிராமை விட பாதுகாப்பானதாக மாற்றுமா என்ற கேள்வி பரவலாக எழுந்துள்ளது.

ட்விட்டர் மெசேஜஸ்-இல் எண்ட்-டு-எண்ட் என்க்ரிப்ஷன் வசதியை செயல்படுத்தும் விவரங்களை ஆப் ஆய்வாளர் ஜான் மன்குன் வொங் கண்டறிந்துள்ளார். மேலும் இந்த தகவல்களை அவர் தனது ட்விட்டரில் வெளியிட்டு இருக்கிறார். அதில், "ட்விட்டர் ஆண்ட்ராய்டு வெர்ஷனில் வழங்குவதற்காக புது அம்சம் உருவாக்கப்படும் அறிகுறிகளை பார்க்கிறேன்." என குறிப்பிட்டுள்ளார்.

இவரது ட்விட்டர் பதிவுடன், குறியீட்டு விவரங்கள் இணைக்கப்பட்டுள்ளன. இவை என்க்ரிப்ஷன் வசதி வழங்கப்படுவதை உணர்த்துகிறது. இதனை மேலும் உறுதிப்படுத்தும் வகையில், இவரது பதிவுக்கு எலான் மஸ்க் கண் சிமிட்டும் எமோஜியை பதிலாக அளித்து இருக்கிறார். இவரது பதிலில் இருந்தே ட்விட்டர் மெசேஜஸ்-இல் என்க்ரிப்ஷன் வசதி வழங்கப்படுவது உறுதியாகி இருக்கிறது.

எண்ட்-டு-எண்ட் என்க்ரிப்ஷன் வசதியை வழங்குவதன் மூலம் ட்விட்டர் டைரக்ட் மெசேஜஸ் அம்சம் சிக்னல் மற்றும் வாட்ஸ்அப்-க்கு இணையாக பார்க்கப்படும் என கூறப்படுகிறது. மேலும் இந்த அம்சம் சரியான தருணத்தில் கொண்டுவரப்பட இருப்பதாகவும் கூறப்படுகிறது. எண்ட்-டு-எண்ட் என்க்ரிப்ஷன் வசதி பயனர் அனுப்பும் குறுந்தகவல்களை யாரும் பார்க்க முடியாத வகையில் பாதுகாப்பானதாக மாற்றும்.

Tags:    

Similar News