கணினி

ரூ. 47 ஆயிரம் பட்ஜெட்டில் 4K ஸ்மார்ட் டிவி அறிமுகம் - சோனி அதிரடி

Published On 2023-04-27 08:15 GMT   |   Update On 2023-04-27 08:15 GMT
  • சோனி நிறுவனத்தின் புதிய 4K ஸ்மார்ட் டிவி மாடல்கள் இருவித அளவுகளில் கிடைக்கின்றன.
  • புதிய சோனி 4K ஸ்மார்ட் டிவி மாடல்கள் X ரியாலிட்டி ப்ரோ தொழில்நுட்பம் கொண்டிருக்கின்றன.

சோனி நிறுவனம் இந்திய சந்தையில் 4K ரெசல்யூஷன் கொண்ட டாப் எண்ட் ஸ்மார்ட் டிவி மாடல்களை அறிமுகம் செய்தது. புதிய சோனி பிரேவியா X70L சீரிஸ், பிரேவியா X75L 4K டிவி மாடல்களை தொடர்ந்து அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. புதிய பிரேவியா X70L டிவி சீரிஸ் மாடல்களில் மெல்லிய பெசல், அழகிய ஸ்டாண்ட் வழங்கப்பட்டு இருக்கிறது.

இத்துடன் X1 4K பிக்சர் பிராசஸர் வழங்கப்பட்டுள்ளது. இது தலைசிறந்த வீடியோக்களை பிரதிபலிக்கிறது. இதில் உள்ள பிஎஸ்5 சப்போர்ட் தலைசிறந்த கேமிங் அனுபவத்தை வழங்குகிறது. இந்த ஸ்மார்ட் டிவி 4K X ரியாலிட்டி ப்ரோ தொழில்நுட்பம் கொண்டிருக்கிறது. இந்த டிவி கூகுள் டிவி ஒஎஸ், ஆப்பிள் ஹோம் கிட், ஏர்பிளே கொண்டுள்ளது. இதில் உள்ள 20 வாட் ஒபன் பேஃபில் ஸ்பீக்கர்கள் மற்றும் டால்பி ஆடியோ தொழில்நுட்பம் தலைசிறந்த ஆடியோ அனுபவத்தை வழங்குகிறது.

 

இத்துடன் வழங்கப்படும் டிவி ரிமோட் வாய்ஸ் சார்ந்த அம்சங்கள், ஆறு செயலிகளுக்கான ஹாட்கீ கொண்டிருக்கிறது. இத்துடன் X70L மாடலில் X ப்ரோடெக்ஷன் ப்ரோ தொழில்நுட்பம் வழங்கப்பட்டு இருக்கிறது.

சோனி பிரேவியா X70L அம்சங்கள்:

4K அல்ட்ரா ஹெச்டி 3840x2160 பிக்சல் ஸ்கிரீன்

X1 4K பிராசஸர், 4K HDR, லைவ் கலர், 4K X ரியாலிட்டி ப்ரோ

3x HDMI போர்ட்கள், 1x USB போர்ட்

20 வாட் ஆடியோ அவுட்புட், ஒபன் பேஃபில் ஸ்பீக்கர், டால்பி ஆடியோ

கூகுள் டிவி, கூகுள் பிளே, க்ரோம்காஸ்ட் சப்போர்ட்

வாய்ஸ் வசதி கொண்ட ரிமோட்

வாட்ச்லிஸ்ட், வாய்ஸ் சர்ச் மற்றும் பிஎஸ்5 சப்போர்ட்

ஆப்பிள் ஏர்பிளே, ஆப்பிள் ஹோம்கிட் மற்றும் அலெக்சா

விலை மற்றும் விற்பனை விவரங்கள்:

சோனி X70L 4K 43 இன்ச் மாடல் விலை ரூ. 59 ஆயிரத்து 990

சோனி X70L 4K 50 இன்ச் மாடல் விலை ரூ. 74 ஆயிரத்து 900

அறிமுக சலுகையாக 43 இன்ச் X70L ஸ்மார்ட் டிவி மாடல் ரூ. 47 ஆயிரத்து 490 என்று நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இந்த ஸ்மார்ட் டிவி விற்பனை அனைத்து சோனி செண்டர்கள், முன்னணி மின்சாதன பொருட்கள் விற்பனையகங்கள் மற்றும் ஆன்லைன் வலைதளங்களில் நடைபெறுகிறது.

Tags:    

Similar News