கணினி

ஸ்னாப்டிராகன் 8 ஜென் 2 ஃபார் கேலக்ஸி பிராசஸர் அறிமுகம் செய்த சாம்சங்

Update: 2023-01-28 09:04 GMT
  • சாம்சங் நிறுவனம் குவால்காம் உடன் இணைந்து புது மொபைல் பிராசஸரை அறிமுகம் செய்து இருக்கிறது.
  • புது ஸ்னாப்டிராகன் பிராசஸர் கேலக்ஸி மாடல்களுக்காக பிரத்யேகமாக உருவாக்கப்பட்டு இருக்கிறது.

சாம்சங் நிறுவனத்தின் எதிர்கால ஸ்மார்ட்போன் மாடல்களுக்காக சாம்சங் மற்றும் குவால்காம் நிறுவனங்கள் கூட்டணி அமைத்துள்ளன. முன்னதாக குவால்காம் ஸ்னாப்டிராகன் ப்ரோ சீரிஸ் மாடல்களுக்காக இரு நிறுவனங்கள் கூட்டணி அமைத்து இருந்தன. தற்போது கேலக்ஸி S23 சீரிஸ் மாடல்களில் "குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 2 ஃபார் கேலக்ஸி" பெயரில் பித்யேக பிராசஸர் வழங்கப்பட உள்ளன.

புது பிராசஸரின் பெயர் நீண்டு இருக்கும் போதிலும், புது ஃபிளாக்ஷிப் மாடல்களில் விசேஷ சிப்செட் உள்ளதை பயனர்களுக்கு நினைவூட்ட பிரத்யேகமாக மாற்றப்பட்ட ஸ்னாப்டிராகன் லோகோவை சாம்சங் தேர்வு செய்து இருக்கிறது. இந்த லோகோ விளம்பர பொருட்களில் அதிகளவில் பயன்படுத்தப்பட இருக்கிறது. அடுத்த வாரத்தில் இருந்தே பயனர்கள் புது லோகோவை விளம்பர பதாகை மற்றும் வலைதளத்தில் காண முடியும்.

இந்த பிராசஸர் சாம்சங் சாதனங்களில் மட்டும் பிரத்யேகமாக பயன்படுத்தப்பட இருக்கிறது. எனினும், இரு நிறுவனங்கள் இடையிலான ஒப்பந்தம் பற்றிய தகவல்கள் ரகசியமாகவே உள்ளன. முன்னதாக புது சாம்சங் ஸ்மார்ட்போன் விலை விவரங்கள் இணையத்தில் லீக் ஆகி இருந்தது. மேலும் இந்த ஸ்மார்ட்போன்களின் விலை விவரங்களும் வெளியாகி இருக்கிறது.

அதன்படி கேலக்ஸி S23 அல்ட்ரா மாடலில் 6.8 இன்ச் QHD+ 3088x1440 பிக்சல் AMOLED ஸ்கிரீன், 120Hz ரிப்ரெஷ் ரேட், 200MP பிரைமரி கேமரா, 5000 எம்ஏஹெச் பேட்டரி, 45 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி உள்ளிட்டவை வழங்கப்படும் என கூறப்படுகிறது.

Tags:    

Similar News