கணினி

இந்தியாவில் சாம்சங் அறிமுகம் செய்த அதிநவீன ரோபோடிக் சாதனம் பி-ஸ்போக் ஜெட் வாக்யூம் கிளீனர்

Update: 2023-03-29 12:02 GMT
  • சாம்சங் பி-ஸ்போக் ஜெட் மாடல் ஸ்டிக் போன்ற டிசைன் கொண்ட கார்ட்லெஸ் வாக்யூம் கிளீனர் ஆகும்.
  • இதில் உள்ள புதுமைமிக்க நேவிகேஷன் தொழில்நுட்பம் LiDAR சென்சார்களை கொண்டிருக்கிறது.

சாம்சங் நிறுவனம் இந்திய சந்தையில் தனது டாப் எண்ட் வாக்யூம் கிளீனர் மாடல்களை அறிமுகம் செய்து இருக்கிறது. இதில் பி-ஸ்போக் ஜெட், ரோபோடிக் ஜெட் பாட் பிளஸ் ஆகிய மாடல்கள் அடங்கும். இவற்றில் பிஸ்போக் ஜெட் மாடல் ஸ்டிக் போன்ற டிசைன் கொண்ட கார்ட்லெஸ் வாக்யூம் கிளீனர் ஆகும். ஜெட் பாட் பிளஸ் மாடல் அதீத திறன் கொண்டிருக்கிறது. இரு மாடல்களும் அதிநவீன வீடுகளுக்கு ஏற்ற வகையில், முக நுட்பமாக இயங்கும் வகையிலும் சிறப்பாக சுத்தம் செய்யும் திறன் கொண்டுள்ளன.

இவற்றில் உள்ள மல்டி-லேயர் ஃபில்ட்ரேஷன் சிஸ்டம் அதிகபட்சம் 99.999 சதவீதம் தூசியில்லா சூழலை உருவாக்கும் என சாம்சங் தெரிவித்துள்ளது. பி-ஸ்போக் ஜெட் வாக்யூம் கிளீனர் சீரிசில் ஏராளமான மாடல்கள் உள்ளன. பி-ஸ்போக் ஜெட் ப்ரோ எக்ஸ்டிரா (வாக்யூம் + மாப்) விலை ரூ. 89 ஆயிரத்து 900 என்றும் பி-ஸ்போக் ஜெட் பெட் (வாக்யூம்) விலை ரூ. 79 ஆயிரத்து 900 என்றும் ஜெட் பாட் பிளஸ் விலை ரூ. 65 ஆயிரத்து 900 என்றும் நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

 

புதிய வாக்யூம் கிளீனர் மாடல்களை சாம்சங் அதிகாரப்பூர்வ ஆன்லைன் தளம், சாம்சங் எக்ஸ்க்ளூசிவ் ஸ்டோர், சாம்சங் ஷாப் ஆப் உள்ளிட்டவைகளில் வாங்கிட முடியும். இதுதவிர அமேசான் ஆன்லைன் தளத்திலும் விற்பனைக்கு கிடைக்கிறது.

பி-ஸ்போக் ஜெட் ரேஞ்ச்- ஆல்-இன்-ஒன் கிளீன் ஸ்டேஷன் (வாக்யூம் கிளீனரை சார்ஜ் செய்து தானாக குப்பை தொட்டியை சுத்தம் செய்து கொள்ளும்) மற்றும் அதிநவீன டிஜிட்டல் இன்வெர்டர் மோட்டார் கொண்டிருக்கிறது. இது பி-ஸ்போக் ஜெட் மாடலில் 210 வாட் வரையிலான இழுவை திறனும், ஜெட் பாட் பிளஸ் மாடலில் 2500pa வரையிலான இழுவை திறனை வெளிப்படுத்துகிறது.

இந்த அதிநவீன ரோபோட் பிக்ஸ்பி, அலெக்சா மற்றும் கூகுள் ஹோம் போன்ற வாய்ஸ் ரெகாக்னிஷன் திறன் கொண்டுள்ளன. இதை கொண்டு பயனர்கள் வாய்ஸ் கமாண்ட் மூலம் சுத்தம் செய்வது, மோட்களை மாற்றுவது, செய்திகள் மற்றும் வானிலை அப்டேட்களை கேட்க முடியும். இத்துடன் லைவ் கிளீனிங் ரிபோர்ட் மூலம் ரோபோடிக் ஜெட் பாட் பிளஸ் எங்கு சுத்தம் செய்கிறது என்பதை ரியல்டைமில் டிராக் செய்ய முடியும்.

இதில் உள்ள புது-மைமிக்க நேவிகேஷன் தொழில்நுட்பம் LiDAR சென்சார்களை கொண்டிருக்கிறது. இது ரோபோட் லொகேஷனை எந்நேரமும் டிராக் செய்து கொண்டே இருக்கும். இதன் பயன்பாட்டை மேலும் எளிமையாக்க ஸ்மார்ட்திங்ஸ் ஆப் மூலம் ரிமோட் கண்ட்ரோல் மற்றும் மாணிட்டரிங் வசதி வழங்கப்படுகிறது.

Tags:    

Similar News