கணினி

ரூ. 27 ஆயிரம் பட்ஜெட்டில் கேலக்ஸி வாட்ச் 5 சீரிஸ் இந்தியாவில் வெளியீடு

Update: 2022-08-13 05:34 GMT
  • சாம்சங் நிறுவனம் சில தினங்களுக்கு முன் கேலக்ஸி போல்டு மற்றும் கேலக்ஸி வாட்ச் 5 சீரிஸ் மாடல்களை அறிமுகம் செய்தது.
  • புதிய சாதனங்களின் இந்திய வெளியீட்டு பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.

சாம்சங் நிறுவனம் கேலக்ஸி வாட்ச் 5 சீரிஸ் - கேலக்ஸி வாட்ச் 5 மற்றும் கேலக்ஸி வாட்ச் 5 ப்ரோ மாடல்களை இந்திய சந்தையில் வெளியிட்டது. சில நாட்களுக்கு முன்பு தான் இரு சாதனங்களும் சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டன. இவற்றில் முறையே 1.2 இன்ச் மற்றும் 1.4 இன்ச் அளவு கொண்ட சூப்பர் AMOLED ஸ்கிரீன், எக்சைனோஸ் W920 பிராசஸர், சபையர் கிளாஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டு இருக்கின்றன.

வியர் ஒஎஸ் சார்ந்த ஒன் யுஐ 4.5 கொண்டிருக்கும் கேலக்ஸி வாட்ச் 5 சீரிஸ் கிட்டத்தட்ட ஒரே மாதிரியான அம்சங்களை கொண்டுள்ளன. எனினும், கேலக்ஸி வாட்ச் 5 ப்ரோ மாடலில் சற்றே அதிக உறுதியான டைட்டானியம் கேசிங் வழங்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் 5ஏடிஎம்+IP 68 தர வாட்டர் மற்றும் டஸ்ட் ரெசிஸ்டண்ட் வசதி வழங்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் MIL-STD-810G சான்று பெற்று இருக்கின்றன.

இரு வாட்ச்களிலும் பயோ-ஆக்டிவ் சென்சார் வழங்கப்பட்டுள்ளது. இது பல்வேறு உடல் ஆரோக்கிய அம்சங்களை ஒருங்கிணைத்த பிரத்யேக சிப்செட் ஆகும். கேலக்ஸி வாட்ச் 5 மற்றும் கேலக்ஸி வாட்ச் 5 ப்ரோ மாடல்களில் உள்ள பேட்டரிகள் முறையே 13 சதவீதம் மற்றும் 60 சதவீதம் பெரியது ஆகும்.


விலை மற்றும் விற்பனை விவரங்கள்:

- கேலக்ஸி வாட்ச் 5 40mm ப்ளூடூத் (கிராபைட், பின்க் கோல்டு மற்றும் சில்வர்) ரூ. 27 ஆயிரத்து 999

- கேலக்ஸி வாட்ச் 5 40mm எல்டிஇ (கிராபைட், பின்க் கோல்டு மற்றும் சில்வர்) ரூ. 32 ஆயிரத்து 999

- கேலக்ஸி வாட்ச் 5 44mm ப்ளூடூத் (கிராபைட், சபையர் மற்றும் சில்வர்) ரூ. 30 ஆயிரத்து 999

- கேலக்ஸி வாட்ச் 5 44mm எல்டிஇ (கிராபைட், சபையர் மற்றும் சில்வர்) ரூ. 35 ஆயிரத்து 999

- கேலக்ஸி வாட்ச் 5 ப்ரோ 45mm ப்ளூடூத் (பிளாக் டைட்டானியம் மற்றும் கிரே டைட்டானியம்) ரூ. 35 ஆயிரத்து 999

- கேலக்ஸி வாட்ச் 5 ப்ரோ 45mm எல்டிஇ (பிளாக் டைட்டானியம் மற்றும் கிரே டைட்டானியம்) ரூ. 49 ஆயிரத்து 999

இவற்றின் முன்பதிவு சாம்சங் மற்றும் முன்னணி ஆன்லைன் விற்பனை வலைதளங்கள் மற்றும் சில்லறை விற்பனை மையங்களில் ஆகஸ்ட் 16 ஆம் தேதி துவங்குகிறது. விற்பனை ஆகஸ்ட் 26 ஆம் தேதி துவங்குகிறது.

அறிமுக சலுகை விவரங்கள்:

கேலக்ஸி வாட்ச் 5 சீரிஸ் மாடல்களை முன்பதிவு செய்வோர் ரூ. 11 ஆயிரத்து 999 மதிப்புள்ள கேலக்ஸி பட்ஸ் 2 மாடலை ரூ. 2 ஆயிரத்து 999 விலையில் வாங்கிட முடியும். இத்துடன் ரூ. 5 ஆயிரம் கேஷ்பேக் உடன் எளிய கடன் வசதி, பழைய சாதனங்களை எக்சேன்ஜ் செய்து மேலும் ரூ. 5 ஆயிரம் வரை கேஷ்பேக் பெற முடியும்.

Tags:    

Similar News