கணினி
null

கேலக்ஸி புக்3 சீரிஸ் இந்திய விலை அறிவிப்பு - சாம்சங் அசத்தல்

Update: 2023-02-03 04:29 GMT
  • சாம்சங் நிறுவனத்தின் புதிய தலைமுறை ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போன்களுடன் கேலக்ஸி புக்3 சீரிஸ் மாடல்களும் அறிமுகம்.
  • ஸ்மார்ட்போன்களை தொடர்ந்து புதிய கேலக்ஸி புக்3 சீரிஸ் இந்திய விலையை சாம்சங் அறிவித்து இருக்கிறது.

சாம்சங் நிறுவனம் கேலக்ஸி புக்3 சீரிஸ்- கேலக்ஸி புக்3 அல்ட்ரா, கேலக்ஸி புக்3 ப்ரோ மற்றும் கேலக்ஸி புக்3 ப்ரோ 360 மாடல்களை அறிமுகம் செய்து இருக்கிறது. புதிய கேலக்ஸி புக்3 சீரிஸ் மாடல்களில் இண்டெல் கோர் 13th Gen பிராசஸர்களை கொண்டிருக்கின்றன. புதிய லேப்டாப்களின் மூலம் சாம்சங் நிறுவனம் இந்திய சந்தையில் கேலக்ஸி சீரிசை விரிவுப்படுத்தும் முயற்சியை மேற்கொண்டுள்ளது.

கேலக்ஸி புக்3 லேப்டாப்கள் சீம்லெஸ் மல்டி-டிவைஸ் கனெக்டிவிட்டி, டாப் எண்ட் ஹார்டுவேரை எதிர்பார்க்கும் வாடிக்கையாளர்களுக்காக உருவாக்கப்பட்டு இருக்கிறது. இந்த காலத்து மல்டி-டிவைஸ் உலகத்துக்கு ஏற்ப கேலக்ஸி புக்3 சீரிஸ் மாடல்கள் சந்தையின் முன்னணி நிறுவனங்களுடன் கூட்டணி அமைத்து உருவாக்கப்பட்டு இருக்கிறது. இவை தலைசிறந்த மல்டி-டிவைஸ் கனெக்டிவிட்டியை பலதரப்பட்ட சாதனங்கள் மற்றும் இயங்குதளங்கள் இடையே வழங்குகிறது.

கேலக்ஸி புக்3 மாடல்களில் மேம்பட்ட செயல்திறன் வழங்கும் நோக்கில் முற்றிலும் புதிய சிபியு, ஜிபியு மற்றும் டிஸ்ப்ளே வழங்கப்பட்டு இருக்கிறது. கேலக்ஸி புக்3 அல்ட்ரா மாடலில் அதிநவீன 13th Gen இண்டெல் கோர் i9 பிராசஸர் வழங்கப்பட்டு இருக்கிறது. NVIDIA RTX GeForce 4070 GPU கொண்டிருக்கும் கேலக்ஸி புக்3 அல்ட்ரா அதிரடி கிராஃபிக்ஸ் மற்றும் சிறப்பான கேமிங் அனுபவத்தை வழங்குகிறது.

இதில் உள்ள டைனமிக் AMOLED 2X டிஸ்ப்ளே மற்றும் 3K ரெசல்யூஷன், 120Hz அட்ப்டிவ் ரிப்ரெஷ் ரேட் சிறப்பான வியூவிங் அனுபவத்தை வழங்கும். இத்துடன் மல்டி கண்ட்ரோல் அம்சம் கொண்டு கணினி, கேலக்ஸி டேப் மற்றும் ஸ்மார்ட்போன் உள்ளிட்டவைகளை கேலக்ஸி புக்3 சீரிஸ் கீபோர்டு மற்றும் டிராக்பேட் மூலம இயக்க முடியும். Expert RAW அம்சம் மூலம் கேலக்ஸி ஸ்மார்ட்போனில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை புக்3 சீரிசுக்கு டிரான்ஸ்ஃபர் செய்து எடிட் செய்ய முடியும்.

விலை விவரங்கள்:

இந்திய சந்தையில் புதிய கேலக்ஸி புக்3 360 சீரிஸ் விலை ரூ. 1 லட்சத்து 09 ஆயிரத்து 990 என துவங்குகிறது. இதன் டாப் எண்ட் கேலக்ஸி புக்3 அல்ட்ரா மாடலின் விலை ரூ. 2 லட்சத்து 81 ஆயிரத்து 990 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

அறிமுக சலுகையாக கேலக்ஸி புக்3 அல்ட்ரா வாங்குவோருக்கு ரூ. 10 ஆயிரமும், கேலக்ஸி புக்3 ப்ரோ சீரிஸ் வாங்குவோருக்கு ரூ. 8 ஆயிரமும் கேஷ்பேக் ஆக வழங்கப்படுகிறது. இத்துடன் அதிகபட்சம் 24 மாதங்களுக்கு வட்டியில்லா மாத தவணை முறை வசதியும் வழங்கப்படுகிறது. முன்பதிவு சலுகைகளின் கீழ் கேலக்ஸி புக்3 அல்ட்ரா வாங்குவோர் ரூ. 50 ஆயிரத்து 990 மதிப்புள்ள M8 ஸ்மார்ட் மாணிட்டரை ரூ. 1,999 விலையில் வாங்கிட முடியும்.

கேலக்ஸி புக்3 ப்ரோ 360 மற்றும் கேலக்ஸி புக்3 ப்ரோ மாடல்களுக்கான முன்பதிவு ஏற்கனவே துவங்கி நடைபெற்று வருகிறது. கேலக்ஸி புக்3 அல்ட்ரா மாடலுக்கான முன்பதிவு பிப்ரவரி 14 ஆம் தேதி துவங்குகிறது. முன்பதிவு சாம்சங் வலைதளம், முன்னணி ஆன்லைன் வலைதளங்கள் மற்றும் தேர்வு செய்யப்பட்ட சில்லறை விற்பனை மையங்களில் நடைபெறுகிறது.

Tags:    

Similar News