கணினி

அடுத்த மாதம் இந்தியா வரும் புது ஒன்பிளஸ் டிவி

Published On 2023-01-24 13:46 GMT   |   Update On 2023-01-24 13:46 GMT
  • ஒன்பிளஸ் நிறுவனம் இந்திய சந்தையில் ஏராளமான புது சாதனங்களை அறிமுகம் செய்யும் பணிகளில் ஈடுபட்டு வருகிறது.
  • சமீபத்தில் ஒன்பிளஸ் 11 ஃபிளாக்‌ஷிப் சீரிஸ் ஸ்மார்ட்போன் சீன சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது.

ஒன்பிளஸ் நிறுவனம் தனது ஒன்பிளஸ் 11 மற்றும் ஒன்பிளஸ் பட்ஸ் ப்ரோ 2 மாடல்களின் இந்திய மற்றும் சர்வதேச வெளியீடு பிப்ரவரி 7 ஆம் தேதி நடைபெறும் என ஏற்கனவே அறிவித்து விட்டது. இந்த நிலையில், ஒன்பிளஸ் டிவி 65 Q2 ப்ரோ மாடலும் இதே நாளில் அறிமுகம் செய்யப்படும் என ஒன்பிளஸ் நிறுவனம் அறிவித்து இருக்கிறது. "கிளவுட் 11" நிகழ்வில் புது ஸ்மார்ட்போன், இயர்பட் வரிசையில் தற்போது ஃபிளாக்ஷிப் டிவியும் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.

புதிய ஒன்பிளஸ் டிவி Q சீரிஸ் அதிநவீன தொழில்நுட்பம், பிரீமியம் விஷூவல் மற்றும் சவுண்ட் அம்சங்களை பயனர்களிடம் கொண்டு சேர்க்கும் வகையில் உருவாக்கப்பட்டு வருகின்றன. ஒன்பிளஸ் டிவி 65 Q2 ப்ரோ மாடல் அதன் முந்தைய வெர்ஷனை விட மேம்பட்ட அம்சங்கள், அதிநவீன தொழில்நுட்பங்களை கொண்டிருக்கும் என எதிர்பார்க்கலாம்.

முன்னதாக ஒன்பிளஸ் Q1 சீரிஸ் மாடல் 2019 வாக்கில் அறிமுகம் செய்யப்பட்டது. இத்துடன் Q1 ப்ரோ வெர்ஷன் ஸ்லைடிங் சவுண்ட்பார் கொண்டிருந்தது. தற்போது புதிய Q சீரிஸ் டிவி வித்தியாசமான டிசைன் கொண்டிருக்கும் என ஒன்பிளஸ் வெளியிட்டு இருக்கும் டீசரில் தெரியவந்துள்ளது. ஏற்கனவே Q1 மாடலுடன் ப்ரோ மாடல் ஒன்றும் அறிமுகம் செய்யப்பட்ட நிலையில், தற்போது Q2 ப்ரோ மட்டுமே அறிமுகமாகும் என தெரிகிறது.

ஒன்பிளஸ், அமேசான் மற்றும் ப்ளிப்கார்ட் வலைதளங்களில் புது ஸ்மார்ட் டிவி-க்காக "Notify Me" பட்டன் வழங்கப்பட்டு இருக்கிறது. மேலும் இந்த ஸ்மார்ட் டிவி இந்தியா முழுக்க ஆஃப்லைன் தளங்களில் விற்பனை செய்யப்படும் என ஒன்பிளஸ் தெரிவித்துள்ளது. வரும் நாட்களில் புதிய ஒன்பிளஸ் டிவி பற்றிய தகவல்கள் வெளியாகும் என எதிர்பார்க்கலாம்.

Tags:    

Similar News