கணினி

ரூ. 37 ஆயிரம் தான் - ஒன்பிளஸ் பேட் இந்திய விலை அறிவிப்பு!

Published On 2023-04-25 15:49 IST   |   Update On 2023-04-25 15:49:00 IST
  • ஒன்பிளஸ் நிறுவனத்தின் புதிய டேப்லெட் மாடல் மீடியாடெக் டிமென்சிட்டி 9000 பிராசஸர் கொண்டுள்ளது.
  • இந்திய சந்தையில் இந்த பிராசஸர் உடன் அறிமுகமாகி இருக்கும் முதல் டேப்லெட் இது ஆகும்.

ஒன்பிளஸ் நிறுவனம் இந்திய சந்தையில் தனது முதல் டேப்லெட்- ஒன்பிளஸ் பேட் விலையை அறிவித்து இருக்கிறது. மேலும் இந்த மாடலுக்கான முன்பதிவு, விற்பனை தேதி மற்றும் சலுகைகள் பற்றிய விவரங்களை தெரிவித்துள்ளது.

புதிய ஒன்பிளஸ் பேட் மாடலில் 11.61 இன்ச் 144Hz ரிப்ரெஷ் ரேட் டிஸ்ப்ளே, டல்பி விஷன், மீடியாடெக் டிமென்சிட்டி 9000 பிராசஸர், டால்பி அட்மோஸ் சப்போர்ட், நீண்ட நேர பேட்டரி பேக்கப் வழங்கும் 9150 எம்ஏஹெச் பேட்டரி வழங்கப்பட்டு இருக்கிறது.

விலை மற்றும் விற்பனை விவரங்கள்:

இந்திய சந்தையில் ஒன்பிளஸ் பேட் 8 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி மாடல் விலை ரூ. 37 ஆயிரத்து 999 என்றும் 12 ஜிபி ரேம், 256 ஜிபி மெமரி மாடல் விலை ரூ. 39 ஆயிரத்து 999 என்றும் நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

இதன் முன்பதிவு அமேசான், ப்ளிப்கார்ட், ஒன்பிளஸ் ஆன்லைன் ஸ்டோர், ஆஃப்லைன் ஸ்டோர்கள், ஒன்பிளஸ் எக்ஸ்பீரியன்ஸ் ஸ்டோர் மற்றும் தேர்வு செய்யப்பட்ட ரிலையன்ஸ் மற்றும் க்ரோமா ஸ்டோர்களில் ஏப்ரல் 28 ஆம் தேதி மதியம் 12 மணிக்கு துவங்குகிறது. விற்பனை மே 2 ஆம் தேதி துவங்க இருக்கிறது.

 

அறிமுக சலுகைகள்:

ஒன்பிளஸ் பேட் வாங்குவோர் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகள், மாத தவணை முறை பரிவர்த்தனை பயன்படுத்தும் போது ரூ. 2 ஆயிரம் வரை உடனடி தள்ளுபடி வழங்கப்படுகிறது.

மாதம் ரூ. 3 ஆயிரத்து 166 வீதம் அதிகபட்சம் 12 மாதங்களுக்கு வட்டியில்லா மாத தவணை முறை வசதி வழங்கப்படுகிறது.

ஒன்பிளஸ், அமேசான், ப்ளிப்கார்ட், தேர்வு செய்யப்பட்ட ஒன்பிளஸ் எக்ஸ்பீரியன்ஸ் ஸ்டோர் மற்றும் தேர்வு செய்யப்பட்ட ரிலையன்ஸ் மற்றும் க்ரோமா ஸ்டோர்களில் முன்பதிவு செய்யும் போது ரூ. 1499 மதிப்புள்ள ஃபோலியோ கேஸ் இலவசமாக வழங்கப்படுகிறது. முன்பதிவு ஏப்ரல் 28 ஆம் தேதி துவங்குகிறது.

ஒன்பிளஸ் எக்சேஞ்ச் சலுகையின் கீழ் பழைய ஒன்பிளஸ் ஸ்மார்ட்போன்களை எக்சேஞ்ச் செய்யும் போது ரூ. 5 ஆயிரம் வரை கூடுதல் தள்ளுபடி வழங்கப்படுகிறது. இத்துடன் தேர்வு செய்யப்பட்ட ஸ்மார்ட்போன் மற்றும் டேப்லெட்டை எக்சேஞ்ச் செய்யும் போது ரூ. 3 ஆயிரம் தள்ளுபடி வழங்கப்படுகிறது.

ஆர்சிசி லின்க்டு சாதனம் வைத்திருப்போருக்கு ரூ. 2 ஆயிரம் வரை உடனடி தள்ளுபடி வழங்கப்படுகிறது. இந்த சலுகை இன்று (ஏப்ரல் 25) முதல் குறுகிய காலக்கட்டத்திற்கு வழங்கப்படுகிறது.

ஒன்பிளஸ் பேட் அம்சங்கள்:

11.6 இன்ச் 2800x2000 பிக்சல் டிஸ்ப்ளே, 144Hz ரிப்ரெஷ் ரேட்

மீடியாடெக் 9000 பிராசஸர்

அதிகபட்சம் 12 ஜிபி ரேம்

5ஜி கனெக்டிவிட்டி

குவாட் ஸ்பீக்கர்கள்

டால்பி விஷன் மற்றும் டால்பி அட்மோஸ்

9510 எம்ஏஹெச் பேட்டரி

67 வாட் சூப்பர்வூக் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி

Tags:    

Similar News