கணினி

ஸ்மார்ட்போன், டிவி வரிசையில் டேப்லெட் வெளியீட்டை உறுதிப்படுத்திய ஒன்பிளஸ்!

Published On 2023-01-26 04:15 GMT   |   Update On 2023-01-26 04:16 GMT
  • ஒன்பிளஸ் நிறுவனம் அடுத்த மாத துவக்கத்திலேயே பல்வேறு சாதனங்களை அறிமுகம் செய்ய இருக்கிறது.
  • ஸ்மார்ட்போன், டிவி, இயர்பட்ஸ் என தொடர்ந்து புது சாதனங்கள் வெளியீட்டை ஒன்பிளஸ் அறிவித்து வருகிறது.

ஒன்பிளஸ் நிறுவனம் "கிளவுட் 11" நிகழ்வை பிப்ரவரி 7 ஆம் தேதி நடத்த இருக்கிறது. இந்த நிகழ்வில் ஒன்பிளஸ் 11 5ஜி, ஒன்பிளஸ் 11R 5ஜி ஸ்மார்ட்போன்கள், ஒன்பிளஸ் டிவி 65 Q2 ப்ரோ, ஒன்பிளஸ் பட்ஸ் ப்ரோ 2, ஒன்பிளஸ் மெக்கானிக்கல் கீபோர்டு என ஏராளமான சாதனங்களை ஒன்பிளஸ் அறிமுகம் செய்ய இருக்கிறது. இந்த வரிசையில், ஒன்பிளஸ் நிறுவனம் மற்றொரு சாதனத்தை அறிமுகம் செய்வதாக அறிவித்துள்ளது.

புது சாதனம் ஒன்பிளஸ் நிறுவனத்தின் முதல் டேப்லெட் மாடல் ஆகும். இது ஒன்பிளஸ் பேட் என அழைக்கப்பட இருக்கிறது. ஒன்பிளஸ் நிறுவனம் தனது ஒன்பிளஸ் பேட் விவரங்களை இதுவரை அறிவிக்கவே இல்லை. எனினும், இந்த டேப்லெட் விவரங்கள் ஒன்பிளஸ் 11 5ஜி மைக்ரசைட்-இல் இடம்பெற்று இருக்கிறது.

ஒன்பிளஸ் அதிகாரப்பூர்வ வலைதளத்தில் புதிய ஒன்பிளஸ் பேட் மாடலுக்கென பிரத்யேக பக்கம் திறக்கப்பட்டுள்ளது. இதில் புது டேப்லெட் பற்றிய விவரங்கள் வரும் நாட்களில் அறிவிக்கப்பட இருக்கிறது. புதிய ஒன்பிளஸ் பேட் மாடலின் மூன்று புறங்களிலும் மெல்லிய பெசல்கள் வழங்கப்படும் என தெரிகிறது. ஒன்பிளஸ் பேட் பற்றிய தகவல்கள் நீண்ட காலமாக வெளியாகி வந்தது.

இந்த நிலையில், புது சாதனத்தின் வெளியீடு தற்போது உறுதியாகி விட்டது. இந்த டேப்லெட் டெஸ்டிங் இம்மமாத துவக்கத்தில் துவங்கி நடைபெற்று வருகிறது. முன்னதாக 2021 வாக்கில் ஒன்பிளஸ் பேட் டேப்லெட் மாடல் EUIPO டிரேட்மார்க் பெற்று இருந்தது. மேலும் இந்த டேப்லெட் ஏற்கனவே சந்தையில் விற்பனை செய்யப்பட்டு வரும் ஒப்போ டேப்லெட்களின் ட்வீக் செய்யப்பட்ட வெர்ஷனாக இருக்கும் என கூறப்படுகிறது.

Tags:    

Similar News