கணினி

150-க்கும் அதிக வாட்ச் பேஸ்கள் கொண்ட நாய்ஸ் X பிட் 2 அறிமுகம் - விலை எவ்வளவு தெரியுமா?

Update: 2022-08-05 05:03 GMT
  • நாய்ஸ் நிறுவனத்தின் முற்றிலும் புதிய X பிட் 2 ஸ்மார்ட்வாட்ச் மூன்று விதமான நிறங்களில் கிடைக்கிறது.
  • இந்த ஸ்மார்ட்வாட்ச் ப்ளூடூத் வெர்ஷன் 5 கனெக்டிவிட்டி கொண்டுள்ளது.

நாய்ஸ் X பிட் 2 ஸ்மார்ட்வாட்ச் இந்திய சந்தையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. புதிய ஸ்மார்ட்வாட்ச் மாடல் HRX உடனான கூட்டணியில் உருவாக்கப்பட்டு இருக்கிறது. புதிய நாய்ஸ் X பிட் 2 மாடலில் 1.69 இன்ச் TFT டிஸ்ப்ளே, ஏராளமான ஆரோக்கியம் மற்றும் பிட்னஸ் டிராக்கர்கள் உள்ளன.

இத்துடன் புதிய X பிட் 2 மாடலில் 150-க்கும் அதிக வாட்ச் பேஸ்கள், அலாரம், பைண்ட் மை போன், வானிலை விவரங்கள் போன்ற அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளன. இந்த ஸ்மார்ட்வாட்ச் முழு சார்ஜ் செய்தால் ஏழு நாட்கள் வரையிலான பேட்டரி லைஃப் வழங்குகிறது. இத்துடன் 30 நாட்களுக்கு ஸ்டாண்ட்பை வழங்குகிறது. இதில் 260 எம்ஏஹெச் பேட்டரி வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த ஸ்மார்ட்வாட்ச்-ஐ முழுமையாக சார்ஜ் செய்ய 2.5 மணி நேரங்கள் ஆகும்.


இதில் அக்செல்லோமீட்டர், ஆப்டிக்கல் ஹார்ட் ரேட் சென்சார் மற்றும் SpO2 டிராக்கர் உள்ளது. இத்துடன் உடலில் எவ்வளவு கலோரிகள் எரிக்கப்பட்டன என்ற விவரங்களை வழங்குவதோடு, ஸ்லீப் மாணிட்டர், ஸ்டெப் டிராக்கர் போன்ற அம்சங்களை கொண்டிருக்கிறது. இந்த ஸ்மார்ட்வாட்ச் ஐஓஎஸ் 10 மற்றும் அதன் பின் வெளியான ஓ.எஸ். மற்றும் ஆணட்ராய்டு 4.4 மற்றும் அதன் பின் வெளியான ஓ.எஸ். கொண்ட சாதனங்களுடன இணைந்து இயங்கும்.

புதிய நாய்ஸ் X பிட் 2 ஸ்மார்ட்வாட்ச் ஜெட் பிளாக், சில்வர் கிரே மற்றும் ஸ்பேஸ் புளூ என மூன்று நிறங்களில் கிடைக்கிறது. இந்திய சந்தையில் புதிய நாய்ஸ் X பிட் 2 ஸ்மார்ட்வாட்ச் விலை ரூ. 3 ஆயிரத்து 999 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. எனினும், இந்த ஸ்மார்ட்வாட்ச் ரூ. 1,999 விலையில் விற்பனை செய்யப்பட்டது.

Tags:    

Similar News