கணினி

இன்பினிக்ஸின் INBook X1 ஸ்லிம் சீரிஸ் லேப்டாப்கள் இந்தியாவில் அறிமுகமானது - விலை எவ்வளவு தெரியுமா?

Published On 2022-06-16 05:00 GMT   |   Update On 2022-06-16 05:00 GMT
  • இன்பினிக்ஸ் INBook X1 ஸ்லிம் லேப்டாப் ஸ்டார்ஃபால் கிரே, காஸ்மிக் புளூ, நோபில் ரெட் மற்றும் அரோரா கிரீன் ஆகிய நிறங்களில் கிடைக்கிறது.
  • வருகிற ஜூன் 21 முதல் இன்பினிக்ஸ் INBook X1 ஸ்லிம் லேப்டாப்கள் பிளிப்கார்ட்டில் விற்பனைக்கு வர உள்ளன.

இன்பினிக்ஸ் நிறுவனம் INBook X1 ஸ்லிம் சீரிஸ் லேப்டாப்களை இந்தியாவில் அறிமுகப்படுத்தி உள்ளது. முன்னதாக அறிவித்தபடி, இவை 14-இன்ச் FHD திரையைக் கொண்டுள்ளன, மூன்று வெவ்வேறு விதமான புராசசர்களுடன் இது வருகிறது. அதன்படி i3 (8ஜிபி + 256ஜிபி | 8ஜிபி + 512ஜிபி), i5 (8ஜிபி + 512ஜிபி |16ஜிபி + 512ஜிபி) மற்றும் டாப் ஸ்பீடு i7 (16ஜிபி + 512ஜிபி) ஆகிய புராசசர்களை கொண்டுள்ளது. 1.24 கிலோ எடையுள்ள அலுமினிய அலாய் ஃபினிஷ் மற்றும் 14.8மி.மீ மெல்லியதாக உள்ளது.

இது HD வெப்கேம், DTS ஒலி தொழில்நுட்பத்துடன் இரண்டு அடுக்கு ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள், டூயல் ஸ்டார் லைட் கேமரா அம்சத்துடன் வருகிறது. இவை வீடியோ அழைப்புகளை மேற்கொள்ளும் போது அல்லது குறைந்த வெளிச்சம் உள்ள சூழ்நிலைகளில் வீடியோ தரத்தை மேம்படுத்த உதவுகிறது.


இன்பினிக்ஸ் INBook X1 ஸ்லிம் லேப்டாப் ஸ்டார்ஃபால் கிரே, காஸ்மிக் புளூ, நோபில் ரெட் மற்றும் அரோரா கிரீன் ஆகிய நிறங்களில் கிடைக்கிறது. விலையை பொறுத்தவரை i3, 8ஜிபி + 256ஜிபி மாடல் ரூ.29,990க்கு கிடைக்கிறது, அதன் 8ஜிபி + 512ஜிபி மாடல் ரூ.32,990க்கு கிடைக்கிறது. அதேபோல் i5-ன் 8ஜிபி + 512ஜிபி மாடல் ரூ.39,990க்கும், 16ஜிபி + 512ஜிபி மாடல் ரூ.44,990க்கும் கிடைக்கிறது.

அதன் டாப் எண்ட் மாடலான i7-ன் 16ஜிபி + 512ஜிபி வேரியண்டின் விலை ரூ.49,990 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இந்த லேப்டாப்கள் வருகிற ஜூன் 21 முதல் பிளிப்கார்ட்டில் விற்பனைக்கு வர உள்ளன. ஆக்சிஸ் பேங்கின் கிரெட் அல்லது டெபிட் கார்டு பயனர்களுக்கு ரூ.3000 சலுகையும் வழங்கப்பட்டு உள்ளது.

Tags:    

Similar News