கணினி

டால்பி ஸ்டீரியோ, FHD ஸ்கிரீன் கொண்ட 43 இன்ச் ஸ்மார்ட் டிவி - ரூ. 13 ஆயிரம் பட்ஜெட்டில் அறிமுகம்!

Published On 2022-11-28 05:51 GMT   |   Update On 2022-11-28 05:51 GMT
  • இன்பினிக்ஸ் நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட் டிவி மாடல் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது.
  • புதிய ஸ்மார்ட் டிவி ப்ளிப்கார்ட் தளத்தில் பிரத்யேகமாக விற்பனை செய்யப்படுகிறது.

இன்பினிக்ஸ் நிறுவனம் ஸ்மார்ட்போன்களை தொடர்ந்து லேப்டாப் மற்றும் ஸ்மார்ட் டிவி என பல்வேறு சாதனங்களை அறிமுகம் செய்து வருகிறது. அந்த வரிசையில், தற்போது இன்பினிக்ஸ் 43Y1 ஸ்மார்ட் டிவி மாடலை அறிமுகம் செய்து இருக்கிறது. புதிய ஸ்மார்ட் டிவி FHD டிஸ்ப்ளே, 20 வாட் டால்பி ஸ்டீரியோ என ஏராளமான அம்சங்களை கொண்டிருக்கிறது. புதிய 43 இன்ச் ஸ்மார்ட் டிவி ப்ளிப்கார்ட் தளத்தில் விற்பனை செய்யப்படுகிறது.

இன்பினிக்ஸ் Y1 சீரிஸ் குறைந்த விலையில் ஸ்மார்ட் டிவி-க்களை விற்பனை செய்து வருகிறது. முன்னதாக 32 இன்ச் மாடல் அறிமுகம் செய்யப்பட்ட நிலையில், தற்போது 43 இன்ச் மாடல் அறிமுகமாகி இருக்கிறது. புதிய இன்பினிக்ஸ் 43Y1 ஸ்மார்ட் டிவி விலை ரூ. 13 ஆயிரத்து 999 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இது இந்திய சந்தையில் கிடைக்கும் குறைந்த விலை ஸ்மார்ட் டிவி மாடல்களில் ஒன்றாகும்.

இன்பினிக்ஸ் 43Y1 அம்சங்கள்:

43- இன்ச் எல்இடி ஸ்கிரீன், 300 நிட்ஸ் பீக் பிரைட்னஸ், FHD ரெசல்யூஷன்

குவாட் கோர் பிராசஸர்

4 ஜிபி ரேம்

அமேசான் பிரைம் வீடியோ

யூடியூப், நெட்ஃப்ளிக்ஸ்

ஸ்டீரியோ சவுண்ட் சிஸ்டம்

20 வாட் டால்பி ஸ்டீரியோ

யூடியூப், பிரைம் வீடியோ ஹாட் கீ கொண்ட ரிமோட்

ஸ்கிரீன் மிரரிங் வசதி

2x HDMI போர்ட்

1 ARC சப்போர்ட்

2x USB போர்ட்கள், 1 RF இன்புட்

ஹெட்போன் ஜாக், 1 COAX அவுட்

LAN, ப்ளூடூத் மற்றும் வை-பை

Tags:    

Similar News