கணினி

புதிய நிறத்தில் அறிமுகமான பிக்சல் பட்ஸ் A

Published On 2022-10-10 05:01 GMT   |   Update On 2022-10-10 05:01 GMT
  • கூகுள் நிறுவனத்தின் பிக்சல் பட்ஸ் A இயர்போன் முற்றிலும் புதிய நிறத்தில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது.
  • முன்னதாக இந்த இயர்போன் வைட் மற்றும் டார்க் ஆலிவ் என இரண்டு நிறங்களில் மட்டும் விற்பனை செய்யப்பட்டு வந்தது.

கூகுள் நிறுவனம் கடந்த ஆண்டு ஜூலை மாத வாக்கில் பிக்சல் பட்ஸ் A மாடலை அறிமுகம் செய்து இருந்தது. ஏராளமான சுவாரஸல்ய அம்சங்களுடன் பிக்சல் பட்ஸ் A விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மேலும் இதன் விலையும் சந்தையில் போட்டியை ஏற்படுத்தும் வகையிலேயே நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

முன்னதாக கூகுள் பிக்சல் பட்ஸ் A மாடல் க்ளியர்லி வைட் மற்றும் டார்க் ஆலிவ் என இரண்டு நிறங்களில் அறிமுகம் செய்யப்பட்டது. தற்போது கூகுள் நிறுவனம் பிக்சல் பட்ஸ் A மாடலை சார்கோல் எனும் புதிய நிறத்தில் அறிமுகம் செய்து இருக்கிறது. பிக்சல் 7, பிக்சல் 7 ப்ரோ, பிக்சல் வாட்ச் சாதனங்களுடன் பிக்சல் பட்ஸ் A சார்கோல் நிற வேரியண்ட் அறிமுகம் செய்யப்பட்டது.

பிக்சல் பட்ஸ் A சார்கோல் நிற வேரியண்ட் விலையும் 99 டாலர்கள் என்றே நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. க்ளியர்லி வைட் மற்றும் டார்க் ஆலிவ் நிற வேரியண்ட்களும் இதே விலையில் தான் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. சார்கோல் நிற பிக்சல் பட்ஸ் A முன்பதிவு ஏற்கனவே துவங்கி நடைபெற்று வருகிறது. முன்பதிவு அமெரிக்கா, கனடா, பிரிட்டன், பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, ஐயர்லாந்து, ஸ்பெயின் என பல்வேறு நாடுகளில் நடைபெறுகிறது.

2019 ஆண்டு கூகுள் அறிமுகம் செய்த பிக்சல் பட்ஸ் மாடலின் குறைந்த விலை எடிஷனாக கடந்த ஆண்டு பிக்சல் பட்ஸ் A அறிமுகம் செய்யப்பட்டது. பிக்சல் பட்ஸ் A மாடலில் 12 மில்லிமீட்டர் டைனமிக் டிரைவர்கள் உள்ளன. இத்துடன் அடாப்டிவ் சவுண்ட், IPX4 வாட்டர் மற்றும் ஸ்வெட் ரெசிஸ்டண்ட் வசதி வழங்கப்பட்டு இருக்கிறது. கனெக்டிவிட்டிக்கு ப்ளூடூத் 5 வழங்கப்பட்டு உள்ளது.

Tags:    

Similar News