கணினி

இனி டோல்கேட் பற்றிய கவலை வேண்டாம்... கூகுள் மேப்ஸின் அசத்தலான புதிய அப்டேட் வந்தாச்சு

Published On 2022-06-15 05:12 GMT   |   Update On 2022-06-15 05:12 GMT
  • புதிய அப்டேட்டை அமெரிக்கா, இந்தியா, ஜப்பான், இந்தோனேசியா ஆகிய நாடுகளில் மட்டுமே அறிமுகப்படுத்தி உள்ளது கூகுள் நிறுவனம்.
  • விரைவில் இதர நாடுகளுக்கும் இந்த சேவை வழங்கப்பட உள்ளது.

கூகுள் நிறுவனத்தின் மிகவும் பயனுள்ள கண்டுபிடிப்புகளுள் ஒன்று கூகுள் மேப். கையில் இது இருந்தால் போது தெரியாத ஊருக்கு கூட சுலபமாக சென்றுவிட்டு வரலாம். அந்த அளவுக்கு பயனர்கள் பயன்படுத்த எளிமையாகவும், புரியும்படியும் அமைக்கப்பட்டு உள்ளது இந்த கூகுள் மேப் சேவை. மேப் சேவைகளை வழங்க பல்வேறு ஆப்புகள் இருந்தாலும் கூகுள் மேப்பை போன்ற துள்ளியம் பிறவற்றில் இல்லை.

அதனால் இதனை பயன்படுத்துவோர் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. வழிகளை காட்டுவது மட்டுமின்றி எண்ணற்ற அம்சங்கள் இந்த கூகுள் மேப் செயலியில் உள்ளது. செல்லும் வழியில் ஏதேனும் சாலை வேலை நடந்தாலோ, டிராபிக் அதிகமாக இருந்தாலோ அதனை உட்கார்ந்த இடத்தில் இருந்தே அறிந்துகொள்ளலாம். இதுதவிர ஓட்டல்கள், பெட்ரோல் பங்குகள், ஏடிஎம்கள், மருத்துவமனை போன்றவற்றை அறிந்துகொள்ள சிறப்பு குறியீடுகளும் அதில் வழங்கப்பட்டிருக்கும்.


இவ்வாறு எண்ணற்ற அம்சங்களை கொண்ட கூகுள் மேப் செயலி, தற்போது மேலும் ஒரு புதிய அப்டேட்டை வெளியிட்டுள்ளது. அதன்படி நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்கச்சாவடிகளில் எவ்வளவு கட்டணம் செலுத்த வேண்டும் என்பதை முன்கூட்டிய தெரிந்து கொள்ளும் வசதியை கூகுள் நிறுவனம் புது அப்டேட்டாக வெளியிட்டுள்ளது.

இதுதவிர சுங்கச்சாவடிகளை தவிர்க்க விரும்புவோர்க்கு வேறு பாதையை காட்டும் புதிய அம்சமும் தற்போதைய அப்டேட்டில் வழங்கப்பட்டுள்ளன. இந்த புதிய அப்டேட்டை அமெரிக்கா, இந்தியா, ஜப்பான், இந்தோனேசியா ஆகிய நாடுகளில் மட்டுமே அறிமுகப்படுத்தி உள்ளது கூகுள் நிறுவனம். விரைவில் இதர நாடுகளுக்கும் இந்த சேவை வழங்கப்பட உள்ளது. 

Tags:    

Similar News