கணினி

கம்மி விலையில் போட் நிறுவனத்தின் புது கேமிங் இயர்பட்ஸ் இந்தியாவில் அறிமுகம்

Published On 2022-06-11 04:19 GMT   |   Update On 2022-06-11 04:19 GMT
  • போட் ஏர்டோப்ஸ் 191G க்கு அந்நிறுவனம் 1 வருட வாரண்டியும் வழங்குகிறது.
  • வாட்டர் ரெஸிஸ்டண்ட் மற்றும் சிரி, கூகுள் ஆசிஸ்டண்ட் போன்றவற்றின் வாய்ஸ் சப்போர்ட்டையும் கொண்டுள்ளது.

போட் ஏர்டோப்ஸ் 191G TWS என்கிற கேமிங் இயர்பட்ஸ் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. போட் நிறுவனத்தின் சமீபத்திய கேமிங் TWS இயர்பட்ஸுகள் மலிவு விலையில் வருகின்றன, மேலும் அமேசான், பிளிப்கார்ட் மற்றும் போட்-இன் அதிகாரப்பூர்வ இணையதளம் வழியாக விற்பனைக்கு கிடைக்கிறது. போட் ஏர்டோப்ஸ் 191G இயர்பட்ஸின் முன்பகுதி டிரான்ஸ்பரண்ட்டாக உள்ளது.

அதேபோல் ஆடம்பரமான கேமிங் கேஸும் கொண்டிருக்கிரது. இயர்பட்கள் மற்றும் கேஸ் இரண்டும் எல்இடி ஒளியைக் கொண்டுள்ளது. போட் ஏர்டோப்ஸ் 191G க்கு அந்நிறுவனம் 1 வருட வாரண்டியும் வழங்குகிறது. வாட்டர் ரெஸிஸ்டண்ட் மற்றும் சிரி, கூகுள் ஆசிஸ்டண்ட் போன்றவற்றின் வாய்ஸ் சப்போர்ட்டையும் கொண்டுள்ளது. ஒவ்வொரு இயர்பட்டும், 10மிமீ டிரைவர், ஐபிஎக்ஸ் 5 ரேட்டிங், புளூடூத் வி 5.2 மற்றும் 40 mAh பேட்டரியுடன் கிடைக்கிறது.


இந்தியாவில் இதன் விலை ரூ.1,499 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இது கிரே, ரெட், புளூ, பிளாக் என நான்கு கலர் வேரியண்ட்களில் கிடைக்கிறது. இந்த இயர்பட்ஸை ஒருமுறை சார்ஜ் செய்தால் 30 மணிநேரம் வரை தாக்குப்பிடிக்கும் வண்ணம் வடிவமைக்கப்பட்டு உள்ளது. இந்த இயர்பட்ஸ் முழுமையாக சார்ஜ் ஆக 30 முதல் 45 நிமிடம் வரை ஆகுமாம். சார்ஜ் செய்துகொள்வதற்காக டைப் C யுஎஸ்பி போர்ட்டும் இதன் கேஸில் உள்ளது.

Tags:    

Similar News