ஜூன் முதல் வாரத்தில் மிக்சட் ரியாலிட்டி ஹெட்செட் அறிமுகம் செய்யும் ஆப்பிள்?
- ஆப்பிள் நிறுவனத்தின் வருடாந்திர டெவலப்பர்கள் நிகழ்வு ஜூன் மாதம் நடைபெற இருக்கிறது.
- மென்பொருள் சார்ந்த புதிய அப்டேட்கள் மற்றும் அறிவிப்புகள் இந்த நிகழ்வில் முக்கிய அம்சமாக இருக்கும்.
ஆப்பிள் நிறுவனம் தனது முதல் மிக்சட் ரியாலிட்டி ஹெட்செட் மாடலை ஜூன் 5 ஆம் தேதி நடைபெறும் சர்வதேச டெவலப்பர்கள் நிகழ்வான WWDC 2023-இல் அறிமுகம் செய்யும் என்று தகவல் வெளியாகி உள்ளது. WWDC வரலாற்றில் அதிக சாதனங்கள் அறிமுகம் செய்யப்படும் நிகழ்வாக இந்த ஆண்டு ஜூன் மாதம் நடைபெறும் WWDC 2023 நிகழ்வு இருக்கும் என தகவல் வெளியாகி உள்ளது.
இது குறித்து ஆப்பிள் வல்லுனரான மார்க் குர்மேன் வெளியிட்டு இருக்கும் தகவல்களில் இந்த ஆண்டின் WWDC நிகழ்வில் ஆப்பிள் நிறுவனம் புதிய மேக் லேப்டாப்களை அறிமுகம் செய்யும் என கூறப்படுகிறது. வழக்கமாக இந்த நிகழ்வில் ஐபோன், மேக், வாட்ச், டிவி மற்றும் ஐபேட் மாடல்களுக்கான புதிய ஒஎஸ் அப்டேட்களை வெளியிடுவதை வாடிக்கையாக கொண்டுள்ளது.
இந்த ஆண்டு நிகழ்வில் ஆப்பிள் நிறுவனம் புதிய ஹெட்செட் அறிமுகம் செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக ஆப்பிள் நிறுவனம் புதிய xrOS-ஐ அறிமுகம் செய்யும் என கூறப்படுகிறது. ஆப்பிள் நிறுவனம் 15 இன்ச் மேக்புக் ஏர், மேம்பட்ட 13 இன்ச் மேக்புக் ஏர், எண்ட்ரி லெவல் 13 இன்ச் மேக்புக் ப்ரோ, ரிப்ரெஷ் செய்யப்பட்ட 24 இன்ச் ஐமேக் மாடல்களை உருவாக்கி வருவதாக கூறப்படுகிறது.
இதுதவிர அளவில் பெரிய மேக்புக் ஏர் மாடலை ஆப்பிள் அறிமுகம் செய்யும் என்றும் இதில் அடுத்த தலைமுறை M3 பிராசஸருக்கு மாற்றாக M2 சிப்செட் வழங்கப்படும் என்று தகவல் வெளியாகி உள்ளது. இந்தியாவில் தற்போது ஆப்பிள் நிறுவனம் M1 மற்றும் M2 பிராசஸர் கொண்ட மேக்புக் ஏர் மாடல்களையே விற்பனை செய்து வருகிறது.
இரண்டு வேரியண்ட்களிலும் 13.3 இன்ச் டிஸ்ப்ளே வழங்கப்படுகிறது. புதிய மாடலில் 15 இன்ச் ஸ்கிரீன் வழங்கப்படுவதால், இதன் விலை சற்று அதிகமாகவே நிர்ணயம் செய்யப்படும் என கூறப்படுகிறது. தற்போது இந்தியாவில் விற்பனை செய்யப்படும் 13 இன்ச் மேக்புக் ஏர் (M2 பிராசஸர் மற்றும் 256 ஜிபி எஸ்எஸ்டி மாடல்) விலைரூ. 1 லட்சத்து 19 ஆயிரத்து 900 என்றும் டாப் எண்ட் மாடல் விலை ரூ. 1 லட்சத்து 49 ஆயிரத்து 900 என்றும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
Photo Courtesy: Renders by Ian